திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தீபிகாவை வைத்து நயன்தாராவை டம்மி பீஸ் ஆக்கிய அட்லி.. செம காண்டில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

Nayanthara – Deepika Padukone: இருக்கிற இடத்துல இருந்தா தான் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும் என்று இப்போதாவது நயன்தாராக்கு தெரிஞ்சிருக்கும். தென்னிந்திய சினிமா முழுக்க லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லி தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அம்மணிக்கு இது மட்டும் பத்தாது பாலிவுட்டிலும் போய் கலக்கி விட்டு தான் வருவேன் என வரிஞ்சு கட்டிக்கொண்டு போனார்.

ஒரு பக்கம் அவருடைய டார்லிங் இயக்குனர் அட்லி, மறுபக்கம் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து அவரை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான் என மயக்கத்திலேயே இருந்து விட்டார். படம் ரிலீஸ் ஆன பிறகு தான் மொத்த பட குழுவும் சேர்ந்து இப்படி தலையில மொளகா அரைச்சு இருக்காங்கன்னு நயன்தாராவுக்கு தெரிய வந்திருக்கிறது. இப்போ பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

Also Read:உதவி இயக்குனரா இருக்கும் போதே ஆடி கார் தான்.. 5 படங்களில் அட்லி சேர்த்த மொத்த சொத்து மதிப்பு

ஜவான் பட சக்சஸ் மீட் இன்டர்வியூக்களில் பேசிய ஷாருக்கான், படத்தின் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் பொழுது தீபிகா படுகோனிடம் உங்களுக்கு ஒரு சின்ன கேரக்டர் தான் என்று சொல்லி நடிக்க வைத்தோம். அவரைபிராங்க் பண்ணவே அப்படி சொன்னோம். படம் ரிலீசானக பிறகு தான் தீபிகாவுக்கு அவர் எவ்வளவு பெரிய முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றே தெரிந்தது என சொல்லியிருந்தார்.

ஆனால் இயக்குனர் அட்லீயும் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ ஷாருக்கானும் பிராங்க் பண்ணியது தீபிகா படுகோனை இல்லை. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தான். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா கதறிக் கொண்டிருக்கிறார் நயன். ஜவான் ரிலீசான பிறகு பாலிவுட்டில் பயங்கர வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த இவருக்கு பல்ப்பு தான் கிடைத்திருக்கிறது.

Also Read:ஷாருக்கான் பட்ட கஷ்டம் வீண் போகல.. அட்லி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட 4வது நாள் வசூல்

ஜவான் படத்தில் நயன்தாரா நடித்த நிறைய காட்சிகளை அட்லி எடிட் செய்து விட்டாராம். மேலும் தீபிகா படுகோனின் காட்சிகள் படம் முழுக்க இருப்பது போல் செய்திருக்கிறார். இதனால் தீபிகா படுகோன் என்னவோ முக்கியமான கேரக்டரில் நடித்தது போலவும், நயன்தாரா சைடு ரோல் பண்ணியது போலவும் தான் படம் பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

நயன்தாரா எப்போதுமே அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு தங்கச்சி கேரக்டர் மற்றும் பிரண்ட்ஸ் கேரக்டரில் யார் நடிக்கிறார் என்பதில் ரொம்பவே உஷாராக இருப்பார். அவரை விட ஸ்கிரீனில் அவர்கள் இளமையாகவும், அழகாகவும் தெரிந்துவிடக் கூடாது என்பதுதான் அதற்கு காரணம். அப்படி இருக்கும் பொழுது நயனுக்கு பாலிவுட் ஆசையை காட்டி இப்படி டம்மி பீஸ் ஆக்கிவிட்டார்கள்.

Also Read:அட்லீ – எங்கள பார்த்தா மெண்டல் மாதிரி இருக்கா.? பிசிரு தட்டாமல் 5 படங்களில் இருந்து காப்பியடித்த புகைப்பட ஆதாரம்

Trending News