திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பல கோடிக்கு அகலக்கால் எடுத்து வைத்த நயன்தாரா.. சிவனை நம்பி பிரயோஜனம் இல்லை என எடுத்த முடிவு

Actress Nayanthara: லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாராவின் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் இப்போது பல கோடிக்கு அகலக்கால் எடுத்து வைத்திருக்கிறார். இதனால் அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

தற்பொழுது கேரளாவில் 10 அடுக்கு கொண்ட அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் 160 வீடுகளை கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்கான பணத்தை, சேர்த்து வைத்த பணத்திலிருந்து எடுக்க வேண்டாம் இனிமேல் எல்லா படங்களில் நடித்து, அந்த பணத்தில் இதை கட்டி முடிக்கலாம் என நயன்தாரா முடிவெடுத்துள்ளார்.

Also Read: பலான காட்சிக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கிய 3 நடிகைகள்.. எல்லாரையும் ஓரம் கட்டிய தமன்னா

இதனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எந்த மொழி படமாக இருந்தாலும் உடனே சம்மதம் தெரிவிக்கிறார். இவர் லிஸ்டில் அடுத்ததாக அதிரடி படம் அறம் 2-வை ஆரம்பிக்க போகிறாராம். நயன்தாரா மூளை வர வர தொழில் ரீதியாக மோசமடைந்து வருகிறது.

இந்த கட்டிடம் கட்டுவதற்கு முழு பொறுப்பு விக்னேஷ் சிவனுக்கும் இருக்கிறது. ஆனால் ஏகே 62 பட வாய்ப்பை சிறுபிள்ளை போல் தவற விட்டுவிட்டு நிற்கிறார். அதன் தொடர்ச்சியாக பிரதீப் ரங்கநாதனை வைத்து படமெடுக்க முடிவெடுத்து, அதற்கான வேலையை தொடங்கினார்.

Also Read: நண்பனை தூக்கி விட களம் இறங்கும் விஜய்சேதுபதி.. பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட திட்டம் போடும் இயக்குனர்

ஆனால் அந்தப் படமும் வேகம் எடுக்கவில்லை. ‘அப்போ விக்னேஷ் சிவன் இனிமேல் படம் எடுத்த மாதிரி தான், இப்படியே வாழ்க்கை போகப் போகுதுன்னு’ பல இயக்குனர்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.  நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியர் உயிர், உலகம் என்ற இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் முறை மூலம் பெற்றெடுத்து வளர்த்து வருகின்றனர். ஏகப்பட்ட குடும்ப பொறுப்புகள் இருந்தும் விக்னேஷ் சிவன் சினிமாவில் விளையாட்டுத்தனமாக இருப்பதால் கேலி கிண்டல் செய்கின்றனர்.

இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் விக்னேஷ் சிவனை நம்பி பிரயோஜனம் இல்லை என்று சகட்டுமேனிக்க கிடைக்கிற படங்களை எல்லாம் நடிப்பதற்கு நயன்தாரா ஒத்துக் கொள்கிறாராம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அந்த 10 மாடி அப்பார்ட்மெண்ட்டை கட்டி முடிக்க போகிறார்.

Also Read: பிகில் படம் போல அடுத்த ஸ்போர்ட்ஸ் கதையுடன் ரெடியான விக்னேஷ் சிவன்.. கூட்டு சேரும் நயன்தாரா

Trending News