தமிழ் சினிமாவில் வடிவேலுவை ஹீரோவாக வைத்து படம் எடுத்த இயக்குனர்களில் சிம்புதேவனைத் தவிர மற்ற யாருமே அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கருத்து கோலிவுட்டில் நீண்ட நாட்களாக இருந்தன.
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய அந்த படத்தில் இயக்குனர் சொல்வதை கேட்டு நடித்தார் வடிவேலு. படமும் வெற்றி பெற்றது.
ஆனால் அதன்பிறகு ஹீரோ அந்தஸ்து வந்துவிட்டதால் இயக்குனர்களின் கதைகளில் சொந்த தலையீடுகளை அதிகமாக வைத்தாராம் வடிவேலு. மாஸ் காட்சிகள் வேண்டும் எனவும், முன்னணி நடிகைகளுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் வேண்டும் எனவும் இயக்குனர்களை டார்ச்சல் செய்ததாக பல பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இவ்வளவு ஏன் சமீபத்தில் ஷங்கர், வடிவேலு கூட்டணியில் உருவாக இருந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் கூட வடிவேலு தன்னுடைய வேலையை காட்டியதால் படத்தை அப்படியே கைவிட்டார் சங்கர்.
சமீபகாலமாக வடிவேலுவின் நம்பிக்கைமிக்க இயக்குனராக வலம் வருபவர் யுவராஜ். வடிவேலுவை வைத்து எலி, தெனாலிராமன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படங்கள் சுமாரான வரவேற்பையே பெறத் தவறின.
இந்நிலையில்தான் நயன்தாராவை சந்தித்து முழுக்க முழுக்க ஒரு காமெடி கதை ஒன்றைக் கூறி இம்ப்ரஸ் செய்துவிட்டாராம் யுவராஜ். இதனால் நயன்தாரா அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தின் மூலம் நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை அடைந்து விடுவேன் என நம்பிக்கை கொண்டுள்ளாராம் யுவராஜ்.