புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

குழந்தை பெற்ற பின் முதல் முறையாக மாஸ் ஹீரோ கூட்டணியில் நயன்தாரா.. No.1 இடம் எனக்கு மட்டும்தான்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் ஆன நான்கு மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு நயன் தாயானார்.

இந்நிலையில் நயன்தாரா கல்யாணத்திற்கு முன் ஒப்பந்தமான படங்களில் தான் நடித்த வந்தார். அதாவது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.

Also Read : இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 இந்திய நடிகைகள்.. நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா!

மேலும் குழந்தை பிறந்த பின்பு நயன் குடும்பத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் புதிய படங்களில் ஒப்பந்தம் போட மாட்டார் என்ற தகவல் வெளியானது. தற்போது அதற்கு நேர் எதிராக புதிய படம் ஒன்றில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஓய்நாட் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார். சமீபகாலமாக நயன்தாரா பெண்களுக்கு முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த தான் நடித்த வருகிறார்.

Also Read : விஜய், அஜித்தை மீண்டும் ஆட்சி செய்ய வரும் 39 வயது நடிகை.. நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்திற்கு வச்ச ஆப்பு

ஆனால் இப்போது ஒப்பந்தமாகியுள்ள படத்தில் மாஸ் ஹீரோக்களான மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோருடன் நயன் நடிக்க உள்ளார். இதனால் கல்யாணத்துக்கு பிறகும் சினிமாவில் படு பிஸியாக நயன்தாரா செயல்பட உள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு உள்ள நம்பர் ஒன் இடத்தை யாருக்காகவும் நயன்தாரா விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. எப்போதுமே நான் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற கர்வத்துடன் இருக்க நயன் ஆசைப்படுகிறார்.

Also Read : 20 வயதில் 40 வயது போல முத்தின மூன்ஜாக இருக்க.. நயன்தாராவை ஆடிஷனனில் அசிங்கப்படுத்தி பிரபலம்

Trending News