சமீபத்தில் நயன்தாரா கொடுத்த பேட்டி தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக். லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம் என்றும் எல்லாரிடமும் கெஞ்சி கேட்டும் அப்படி போடுவதையும், கூப்பிடுவதையும் நிறுத்த மறுக்கிறார்கள் என மன்றாடியுள்ளார் நயன்தாரா.
இது நயன்தாரா வெளியில் அப்பட்டமாய் கூறும் பொய் என மூத்த பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தெரிவித்துள்ளார். குழாயடி சண்டை போல் இந்த பட்டத்துக்கு அவரும் நடிகை திரிஷாவும் ஒரு காலத்தில் சண்டை போட்டு உள்ளார்கள்.
நயன்தாரா படம் ஒப்புக்கொள்ளும் போது அக்ரீமெண்டிலேயே இதை போடச் சொல்வாராம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று தன்னை டைட்டில் கார்டில் போடும்படி கூறுவாராம்.
இதுதான் அவர் வைக்கும் முதல் கோரிக்கை. இப்படி செய்து விட்டு வெளியில் அநியாயத்துக்கு பொய் சொல்லுகிறார் என கூறியுள்ளார் பிஸ்மி.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு படத்தை கூட கூறுகிறார். அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தார் நயன்தாரா. அந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என டைட்டில் போட வேண்டுமென கூறியுள்ளார்.
அதற்கு இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் போட முடியாது என சன் பிக்சர்ஸ் பதிலடி கொடுத்துள்ளது. பொறுத்துக் கொள்ள முடியாத நயன்தாராஅந்தப் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு ஓவர் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனால் சிவா, சன் பிக்சர்ஸ் இடம் மன்றாடி இந்த டைட்டில் பிரச்சனையை சரி செய்துள்ளார். படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என போடப்பட்டது.