வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யாரை திருப்தி படுத்த நயன்தாரா தியேட்டர் கட்டறாங்க.! பெரிய உருட்டா இருக்கே வியந்து பார்த்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா வடசென்னையில் மல்டி ஸ்பெஷல் திரையரங்கை கட்டுகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இதைப்பற்றி ஒரு செய்தி வந்துள்ளது. வடசென்னையின் அடையாளமாக உள்ள அகஸ்தியா திரையரங்கம் கொரோனாவிற்கு பிறகு மூடப்பட்டது. இதனை நயன்தாரா வாங்கி மல்டிபிளக்ஸ் திரையரங்கம் கட்டப் போகிறார் என்ற செய்தி பரவியது.

அகஸ்தியா தனிநபர் சொத்து கிடையாது. யாரும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது. இது ஒரு அறக்கட்டளை. ஏற்கனவே மெட்ரோ பணிகளுக்காக அரசாங்கம் கொஞ்சம் இடத்தை எடுத்துக் கொண்டது.  மீதி உள்ள இடத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் கட்ட 3 வருடத்திற்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Also Read: சிம்புவால் குடிக்கு அடிமையான நயன்தாரா.. முழுசாக மாற்றியது யார் தெரியுமா?

கூடிய விரைவில் மருத்துவமனை கட்ட தொடங்கப்படும். நயன்தாரா பற்றிய வதந்திகளுக்கு நாங்கள் பதில் கூற முடியாது, பத்திரிகைகள் நீங்களே எழுதி, நீங்களே என்னிடம் வந்து கேட்பது நியாயமா! என்று அகஸ்தியா அறக்கட்டளை நிறுவன பொறுப்பாளர்கள் பேசியுள்ளனர். இந்த செய்தி முதலில் வெளியான போது நிஜமாகவே நயன்தாரா பழைய தியேட்டரை வாங்கி, அந்த இடத்தில் நவீன முறையில் மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்ட இருக்கிறார் போல என அனைவருமே நம்பி விட்டனர்.

ஏனென்றால் அந்த அளவிற்கு நயன்தாரா பல பிசினஸை செய்து கொண்டிருக்கிறார். இப்போது மட்டுமல்ல அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே நடித்துக் கொண்டே பல பிசினஸ்களை செய்ய ஆரம்பித்து விட்டார். துபாயில் பல தொழில்களை தொடங்கியுள்ளார் மற்றும் சாய்வாளா என்ற டீக்கடையையும் நடத்தி வருகிறார்.

Also Read: நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு அடம் பிடிக்கும் சிங் நடிகை.. வாய் சவடாலால் போன பட வாய்ப்பு

பியூட்டி சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்வ–திலும் இணைந்து லாபத்தை எடுத்து வருகிறார்.   அந்த வரிசையில் தற்பொழுது புதிதாக வடசென்னை பகுதியில் பழைய தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கி நவீன முறையில் தியேட்டரைக் கட்டி போகிறார் போல என்ற பரபரப்பான வதந்தி கிளம்பியது.

ஆனால் தீவிரமாக விசாரித்து பார்க்கும் போது தான், அது அறக்கட்டளைக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வதந்தியை கேள்விப்பட்டதும் ‘பெரிய உருட்டா இருக்கே!’ என நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன் வியந்து பார்க்கிறார்.

Also Read: 40 வயதில் ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் கனவுக்கன்னி.. அதுவும் நயன்தாராவுக்கு வில்லியாக

Trending News