சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கெத்தெல்லாம் போய் இறங்கி வந்த நயன்தாரா.. கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்

Nayanthara : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அவருடைய கெத்தைப் பார்த்து தமிழ் சினிமாவே ஆச்சரியத்தில் உறைந்தது. அவர் எது செய்தாலும் ஒரு பெரிய செய்தியாக பார்க்கப்பட்டு வந்தது. கல்யாணத்திற்கு பிறகு நயன்தாரா நிலை அப்படியே மாறிவிட்டது.

அவருடைய படங்கள் எதுவுமே பெரிய அளவில் போகவில்லை. கல்யாணத்துக்கு பிறகு வெற்றி பெற்ற படம் என்றால் அது பாலிவுட்டில் ஜவான் மட்டும் தான். அதன் பிறகு அன்னபூரணி படம் வரவேற்பு பெற்றாலும் புயலால் படத்தின் வசூல் பாதித்தது. அதன் பிறகு ஓடிடியில் வெளியிடப்பட்டது.

அப்போதும் மத ரீதியாக படத்தில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக அதுவும் தூக்கப்பட்டது. இப்போது இன்னும் இறங்கி போய்விட்டார். அதாவது சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நயன்தாரா ஒரு ஷேர் ஆட்டோவில் வருவது போல வீடியோ வெளியாகி அவரது இமேஜ் டேமேஜ் ஆனது.

Also Read : மதக் கலவரத்தால் ஓடிடி-யிலிருந்து நீக்கப்பட்ட படம்.. தர்ம அடி வாங்கும் நயன்தாராவின் மார்க்கெட்

இதைத்தொடர்ந்து இப்போது நயன்தாரா பெண்களுக்காக நாப்கின் கம்பெனிக்கு ப்ரமோஷன் செய்து வருகிறார். கண்டிப்பாக பெண்கள் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் நயன்தாரா முன்பெல்லாம் ஒரு கெத்துடன் இருந்தார்.

ஆனால் இப்போது நயன்தாரா ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வது என மொத்தமாக மாறிவிட்டார். கத்தரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்ததானே ஆகணும, அதேபோல் ஏதாவது செஞ்சு பொழப்ப நடத்த வேண்டும் என்பதற்காக நயன்தாரா எவ்வளவு இறங்கி வந்து விட்டார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : திரிஷா நயன்தாராவை ஓவர் டேக் பண்ணும் நடிகை.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வரும் குழாயடி சண்டை

Trending News