வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாராவால் ஃபெயிலியரான படம்.. மனைவிக்கு வக்காலத்து வாங்கிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிப்பில் திருமணத்திற்கு பின்பு வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் போகவில்லை. நயன்தாராவின் ஒரு படம் ஃபெயிலியருக்கு அவரே இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் ஹீரோ மற்றும் ஹீரோயின் பட்டங்கள் ரசிகர்களால் கொடுக்கப்படுவதில்லை.

அவர்களே முன்வந்து தயாரிப்பாளர்களிடம் இந்த பட்டத்தை போடுமாறு கேட்டுக் கொள்கின்றனர். அப்படிதான் நயன்தாராவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தனக்கு போட வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி தான் டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என படங்களில் போடப்படுகிறது.

Also Read : அஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்.

ஆனால் ஒரு தயாரிப்பாளர் மட்டும் அப்படி போட முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். அதாவது கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் o2. இந்த படத்தில் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் நயன்தாராவுக்கு அவரது காதல் கணவரும் ஒத்து ஊதியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் இவர்கள் சொல்வதை கண்டு கொள்ளவில்லையாம். இதனால் படத்தில் ஏகப்பட்ட கண்டிஷனை நயன்தாரா போட்டுள்ளார். இந்த படத்தில் பஸ் மண்ணுக்குள் புதைவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

Also Read : நீங்க இல்லன்னா என்னால பிழைக்க முடியாதா.. ஷாருக்கானை நம்பி புது கணக்கு போடும் நயன்தாரா

அந்த சீனில் என் மீது கரைகள் எதுவும் இருக்கக் கூடாது என ஸ்ட்ரிக்ட் ஆக நயன்தாரா இயக்குனரிடம் கூறிவிட்டாராம். இவர் மீது மட்டும் கரைகள் எப்படி இல்லாமல் இருக்கும். இதில் லாஜிக்கே இருக்காது என்று சொல்லியும் நயன்தாரா கேட்க மறுத்து விட்டாராம்.

இதேபோல் o2 படத்தில் பல விஷயங்கள் இயக்குனர் நினைத்தபடி செய்ய முடியவில்லை. மேலும் படம் ஃபெயிலியர் ஆனதற்கு நயன்தாரா தான் காரணம் என்று இயக்குனர் புலம்பித் தவித்தார். இப்படி நயன்தாரா செய்யும் தவறுக்கு விக்னேஷ் சிவனும் வக்காலத்து வாங்கி வருகிறார்.

Also Read : கடைசி வரை நயன்தாராவை வைத்து விளையாட்டு காட்டிய விக்னேஷ் சிவன்.. உச்சக்கட்ட பிபி-யில் விரட்டிய அஜித்

Trending News