திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தனுஷ் விவாகரத்துக்கு காரணமே நயன்தாரா தான்.. இந்த வயித்தெரிச்சல் சும்மா விடாது

கடந்து 2 வாரங்களாக நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து தான் தலை விரித்து ஆடுகிறது. தனுஷ் 10 கோடி கேட்ட விவகாரம் புயலை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நயன்தாரா, அவருக்கு 3 பக்கத்துக்கு பதில் ஒன்றை கொடுத்தார். ஆனால் தலைவி வெறும் பதிலை மட்டும் கொடுக்காமல், தனுஷின் வளர்ச்சியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து இருந்தார்.

அவரது லெட்டரை படித்தால், எதோ நயன்தாரா மட்டும் தான் தற்போது உள்ள நம்பர் 1 இடத்திற்கு கஷ்டப்பட்டு வந்தது போலவும், தனுஷ், அப்பாவின் பெயர் வைத்து இன்று டாப்-க்கு வந்தது போலவும் எழுதி இருந்தார். இது தான் ரசிகர்களுக்கு ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. தனக்கு ஆதரவு குரல்கள் ஒலிக்கும் என்று எதிர்பார்த்த நயன்தாரா, அவரே அவருக்கு ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது பிறகு தான் தெரிந்தது.

தனுஷ் விவாகரத்துக்கு காரணமே நயன்தாரா தான்

மேலும், இவரது இந்த கடிதத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மீது வெறுப்புகளை ரசிகர்கள் கக்க ஆரம்பித்தனர். இப்படி பட்ட சூழ்நிலையில், தனுஷுக்கு விவாகரத்து நடந்துமுடிந்துள்ளது. அந்த நாளில், நயன்தாரா ஒரு ஸ்டோரி போட்டிருந்தார். “அடுத்தவர்களை பொய் சொல்லி ஏமாற்றினால், அதை கடனாக நினைத்துக்கொள்ளுங்கள்.. உங்களுக்கு அது வட்டியோடு வந்து சேரும் ” என்று தத்துவம் போட்டிருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதில் உண்மை தன்மை உள்ளதாகவும் ஒரு சில சினிமா பத்திரிக்கையாளர்கள் உறுதி செய்கிறார்கள். தற்போது தனுஷுக்கு நடந்துள்ள விவாகரத்துக்கு காரணமே நயன்தாரா தானாம். தனது தனிப்பட்ட வாழ்க்கை நயன்தாராவால் பாதிக்கப்பட்டதால் தான், அவர் 10 கோடி நஷ்டஈடு கேட்டாராம்.

நானும் ரவுடி தான் பட விவகாரம் ஊருக்கே தெரியும்.. 6 கோடி பட்ஜெட்டில் முடிக்க சொன்னால், 16 கோடி-க்கு மொய் வைத்துவிட்டார் விக்னேஷ் சிவன். இதுவே தனுஷ் குடும்பத்துக்குள் பிரச்சனையை கிளப்பியுள்ளது. தனுஷுக்கு அந்த காலகட்டத்தில், சரியான படவாய்ப்பு வரவில்லை. அப்போது தனுஷ் தயாரிப்பில் இறங்கினார்.

அப்படி தான் நானும் ரவுடி தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். ஆனால் இந்த படத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஏற்படுத்திக்கொடுத்த நஷ்டம், தனுஷ் குடும்பத்துக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. லதா ரஜினிகாந்த், “இப்படி சொத்துக்களை ஏன் வீணடிக்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். மேலும் இந்த பண பிரச்சனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷுக்கும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த ஆரம்பப்புள்ளி தான், இவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, பின்பு எல்லா பிரச்சனைகளும் தலைதூக்கி, இன்று விவகாரத்தில் வந்து முடிந்துள்ளது. தனுஷ் விவாகரத்துக்கு ஒரு வகையில் நயன்தாராவும் காரணம் என்று தற்போது செய்திகள் பரவி வருகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள், “தலைவா நீ கூட 10 கோடி கேட்டா கூட தப்பு இல்ல.. ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News