புதன்கிழமை, ஜனவரி 29, 2025

என்னது நயன்தாராவுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லையா? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டாக்டர்

அண்மைகாலமாக இணையத்திலும், நம் இல்லங்களிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால், நயன்தாரா,விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு வாடகை தாய் மூலமாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள். விக்னேஷ் சிவன், அக்டோபர் 9 ஆம் தேதி தனது சமூக வலைத்தளபக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் தீயாய் பரவி இன்னும் அணையாமல் உள்ளது.

பொதுவாக வாடகைத்தாய் வைத்து குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்தியாவில் பல சட்ட விதிமுறைகள் உள்ளன. அதிலும் முக்கியமாக திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது குழந்தை இல்லாமல் இருக்க வேண்டும். அவர்கள் தேர்வு செய்யும் வாடகைத்தாய் அவர்கள் உறவு முறைப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளது.

Also Read : நயன்-விக்கி விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பு.. நாடக அரசியலை புட்டு புட்டு வைத்த பிரபலம்

இதனிடையே சமீபத்தில் வாடகைத்தாய் முறையை பற்றி பல மருத்துவர்கள் இணையத்தில் பேசி வரும் நிலையில், வாடகை தாய் முறையில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் ரத்த உறவு தாயார், வாடகை தாயாக இருப்பார்களா அல்லது யார் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் அக்குழந்தைகளுக்கு தாயா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மருத்துவர், இந்தியாவில் பாரம்பரியமான வாடகைத்தாய் முறை இருந்தது. அந்த முறையில் குழந்தை யார் வயிற்றில் வளர்கிறதோ அவர்களே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். ஆனால் இந்த முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

Also Read : பணம் பாதாளம் வரை பாயும், உறுதி செய்த நயன்தாரா.. சிக்கலில் இருந்து தப்பிக்க பக்காவா ரெடியான சர்டிபிகேட்

இரண்டாவது முறை ஐ.வி.எப் என்ற கருத்தரிப்பு முறை, இது தான் தற்போது இந்தியாவில் சட்ட ரீதியாக அனுமதிபெற்று செயல்பட்டு வருகிறது. இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, வாடகை தாய் தேவைப்படாது. அப்படியே தேவைப்பட்டாலும் வாடகைத் தாயின் குழந்தையாக அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.

இதனிடையே நயன்தாரா துபாயில் இருந்த தனது உறவுமுறை பெண்ணை வாடகை தாயாக நியமித்து,இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட நிலையில், அந்தக்குழந்தைகளுக்கு நயன்தாரா ரத்த உறவு தாயாக இருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விக்னேஷ் சிவன் அக்குழந்தைகளுக்கு தந்தை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Also Read : தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி.. நயன்தாராக்கு டஃப் கொடுப்பாங்க போல

Trending News