செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

திரிஷா படத்தில் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரிஷா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் இவரது குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரை அதே அழகு இளமையுடன் இருக்கும் திரிஷா ஹீரோயினாக மட்டுமே நடித்த வருகிறார்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பயணித்து வந்தாலும் இருவரும் சேர்ந்து நடிக்கும்படி வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலமுறை அது போன்ற வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு சில காரணங்களினால் அது தட்டிப் போய்க் கொண்டே இருந்தது.

Also Read :ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் திரிஷா நடிப்பதாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் திரிஷா சில காரணங்களினால் இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இப்போது திரிஷா, மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இப்படம் மலையாள மொழியில் உருவாகி வருகிறது. ரெட் கார்பேட் சுரேஷ்-க்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் இணைந்து இந்த படத்தை எடுத்துக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

Also Read :குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா

ராம் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரது கதாபாத்திரம் முதல் பாகத்தின் இறுதியில் தொடங்கி இரண்டாம் பாகம் வரை தொடரும் என கூறப்படுகிறது.

ராம் படத்தின் மூலம் முதல்முறையாக திரிஷா, நயன்தாரா இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் கண்டிப்பாக இப்படம் மாஸாக இருக்கும் என கூறி வருகிறார்கள். ஏனென்றால் எவர் கிரீன் நடிகைகளான திரிஷா, நயன்தாரா இருவரையும் ஒரே திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read :மூன்றே நாளில் 100 கோடி கல்லா கட்ட போகும் நயன்தாரா.. கல்யாணத்துக்கு பின்னும் விட்டுக்கொடுக்காத No.1 லேடி

Trending News