வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

நயன்தாராவின் 3 காதலர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்த இயக்குனர்.. செம குசும்பு ஓய் உமக்கு!

என்னதான் நயன்தாரா சினிமா வாழ்க்கையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தாலும் சொந்த வாழ்க்கையில் சில காதல் விஷயங்களில் சிக்கி சின்னாபின்னமானது ஊர் அறிந்த கதைதான். ஒன்றா இரண்டா சொல்லிக்கொண்டே போகலாம்.

நடிகர், நடிகைகளின் காதல் கிசுகிசுக்கள் என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் தான். அவர்கள் விருப்பப்பட்டால் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம். இன்றைய தலைமுறையினருக்கு நயன்தாரா மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறது.

nayanthara-cinemapettai-00
nayanthara-cinemapettai-00

ஆனால் அன்றைய காலகட்டங்களில் பல நடிகர்களுடன் தொடர்பில் இருந்த நடிகைகளும் உண்டு, அதேசமயம் ஒரு நடிகர் பல நடிகைகளை திருமணம் செய்து கொள்டதும் அவர்களுடன் தொடர்பில் இருந்ததும் உண்டு.

சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம். மேட்டருக்கு வருவோம். சமீபத்தில் ஓடிடி தளத்தில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக வெளியாகி இலங்கை தமிழர்களின் பிரச்சினையை முன்னெடுத்து வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம்தான் மேதகு.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மேதகு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த படத்தை கிட்டு என்பவர் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய பேஸ்புக் தளத்தில் மகாபாரதத்தில் இடம் பெற்ற இன்று எது உன்னுடையதோ, அது நாளை மற்றொருவறுடையதாகும், அடுத்த நாள் வேறொருவருடையதாகும் என நயன்தாராவின் காதலர்களான சிம்பு, பிரபுதேவா, விக்னேஷ் சிவன் ஆகியோர் குறித்த மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த செய்திதான் இன்றைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

nayanthara-meme-goes-viral
nayanthara-meme-goes-viral
- Advertisement -spot_img

Trending News