புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இரவு நேரத்தில் நயன்தாராவிற்கு இருக்கும் பழக்கம்.. ஓப்பனாக பேசிய விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழில்” ஐயா” திரைப்படம் மூலமாக அறிமுகமானவர். அத்திரைப்படத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் டோரா, மூக்குத்தி அம்மன், மாயா ,காஷ்மோரா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இருப்பினும் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.

சமீபத்தில் நயன்தாராவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளதால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம் நடந்து விடும் என்று நினைத்திருந்த நிலையில், இப்போது அவரது ஆசை, கனவு இன்னும் இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போனது. இயக்குனர் “அட்லி “மூலமாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் “ஷாருக்கானுடன்” நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் 2 ஆண்டுகளுக்குப் பிறகே திருமணம் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம் நயன்தாரா.

nayanthara-vignesh
nayanthara-vignesh

அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன?, என்று கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா “இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்து வைப்பாராம்”, இதைக்கேட்டதும் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

Trending News