வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாராவிற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை கேட்ட ரசிகர்.. அதற்கு கேவலமாக பதில் அளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் பெரிய அளவு வரவேற்பு பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கக் கூடிய அளவிற்கு ஒரு இயக்குனராக பிரபலமானார்.

இவர் இயக்குனராக பிரபலமானது விட நயன்தாரா காதலித்தது மூலம் தான் அதிகம் பிரபலமானார் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா .நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட அதன் பிறகு அனைத்து மீடியாக்களும் இவர்களை காதலர்களாகவே முடிவு செய்துவிட்டனர்.

அதற்குக் காரணம் அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் செய்யும் சேட்டைகளும், காதல் ரொமான்ஸ்கள் வெளிப்படையாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதுதான். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருமே பல மேடைகளிலும் தங்களது காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

vignesh shivan nayanthara
vignesh shivan nayanthara

தொடர்ந்து பல வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் இருவரையும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. அப்படி ரசிகர் ஒருவர் நீங்கள் நயன்தாராவை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு விக்னேஷ் சிவன் கொஞ்சமும் யோசிக்காமல் கல்யாணமெல்லாம் பண்ணினால் செலவு அதிகமாகும் பணத்தை சேமிப்பது மிக முக்கியமானது என கூறியுள்ளார். மேலும் கொரோனா போன பிறகு திருமணம் செய்து கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் நயன்தாராவுடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் கொஞ்சமும் கூச்சமில்லாமல் நாங்கள் இருவரும் முத்தம் கொடுக்கும்போது ரொம்ப பிஸியாக இருப்போம் அப்போது ஏதாவது கேமராமேன் இருந்தால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதற்கு ஒரு சில ரசிகர்களோ அவ்வளவு பிஸியாக முத்தம் கொடுப்பீர்களா எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Trending News