புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரசிகர்களின் பலநாள் கேள்வியை கேட்ட டிடி.. பலே கில்லாடியான பதிலைக் கூறிய நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் நயன்தாராவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

நயன்தாரா ஆரம்பகாலத்தில் அனைத்து டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வந்தார். ஆனால் வெற்றிகள் குவிய புகழும் அதிகரிக்க அதன் பிறகு பெரிய அளவில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது இவர் கை வரிசையாக பல படங்கள் உள்ளன.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தை அவரது காதல் கணவரான விக்னேஷ் சிவன் தயாரித்திருந்தார். அதனால் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் கலந்து கொண்டார். இதற்கு பல ரசிகர்களும் இத்தனை வருடமாக பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா இந்த படத்திற்கு மட்டும் புரோமோஷன் செய்யவேண்டும். இவர்கள் படம் தயாரித்துள்ளதால் ப்ரோமோஷன் கலந்துகொள்வார்கள் அந்த அளவிற்கு நயன்தாரா புத்திசாலி என பலரும் கூறிவந்தனர்.

nayanthara
nayanthara

படத்தின் புரமோஷனுக்காக கலந்துகொண்ட நயன்தாராவிடம் டிடி பல கேள்விகளை முன்வைத்தார். மோதிர விரலால் ஒரு பிரளயமே நடந்தது அதற்கு என்ன காரணம் என கேட்டார். அதற்கு நயன்தாரா நானும் விக்னேஷ் சிவன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் இதில் ஒரு சில குடும்ப நண்பருக்கு மட்டும் தெரியும் என கூறினார்.

அடுத்ததாக நயன்தாராவிடம் நீங்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறீர்களா இல்ல லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை மட்டுமே வாழ்வீர்கள் என கேட்டார். திருமணம் ஆனதும் நிச்சயமாக அனைவருக்கும் தெரிவிப்பேன். ஆனால் திருமணத்தை அனைவருக்கும் சொல்ல மாட்டேன் என கூறினார். மேலும் விக்னேஷ் சிவன் வந்த பிறகு தனது வாழ்க்கையில் அதிகமான படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்ததாகவும் ஒவ்வொரு நாளும் விக்னேஷ் சிவன் ஒவ்வொரு படத்தில் நடிப்பதற்கு தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாதுரை திரைப்படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்திலும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பாட்டு மற்றும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News