சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சுக்லாம் பரதம் சொல்ல பல லட்சம் சம்பளம்.. நயன்-விக்கி மேரேஜ் சீக்ரெட்!

சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நயன்தாரா அணிந்திருந்த வைர,வைடூரியங்கள், மரகதம் பொருத்தப்பட்டிருந்த ஆபரணங்கள் மட்டுமே 3 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்காக பரிசளித்த வைரத்திலான திருமண மோதிரம் மட்டும் 5 கோடியாகும். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா அணிந்திருந்த சிகப்பு புடவை, விலை உயர்ந்த நூலை பயன்படுத்தி நெசவப்பட்டதாம்.

மேலும் திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்காக கொடுக்கப்படும் தாம்பூல தட்டில், வெள்ளி மற்றும் தங்கத்திலானா பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக தமிழகத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்ட ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதனிடையே நயன்தாராவின் திருமணத்தை நடத்தி வைத்த ஐந்து புரோகிதர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் என 25 லட்ச ரூபாய் வரை நயன்தாரா விக்னேஷ் சிவன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படி ஒரு சம்பளத்தை தங்களது வாழ்நாளில் இதுவரை வாங்கியது இல்லை எனவும் புரோகிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க, விக்னேஷ் சிவன் அதனை வாங்கி நயன்தாராவின் கழுத்தில் கட்டி மனைவியாக்கிக் கொண்டார். இதனிடையே நயன்தாரா தனது திருமண வீடியோவை 25 கோடி ரூபாய்க்கு பிரபல ஓடிடி நிறுவனத்தில் வீற்றிருந்த நிலையில், 25 லட்ச ரூபாய் புரோகிதர்களுக்கு செலவு செய்வது என்பது எளிதான விஷயம் தான் என பலரும் தெரிவித்து வருகின்றனர்

இருந்தாலும் பல ஆடம்பரங்கள் நயன்தாராவின் திருமணங்களில் இருந்தாலும் புரோகிதர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து திருமணம் செய்துகொண்ட முதல் நடிகையாக நயன்தாரா தான் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. தற்போது பாங்காக்கில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஹனிமூனிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News