செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மருத்துவர் கேட்ட அருவருப்பான கேள்வி.. நயன்தாராவுக்காக சண்டையிட்ட சின்மயி

நயன்தாராவால் எப்படி குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என கேள்வி கேட்ட மருத்துவரை கிழித்து தொங்கவிட்டுள்ள்ளார் பிரபல பாடகி சின்மயி .ஏழு வருட காதல் வாழ்க்கைக்கு பின் கடந்த 9ஆம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் குவிந்து வந்தாலும், மறுபுறம் நயன்தாராவின் கடந்த கால வாழ்க்கையில் அவர் செய்த காதல், திருமணம் குறித்த பல சர்ச்சையான கமெண்ட்களையும், மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடலூரில் மருத்துவராக உள்ள அறிவன்பன் என்ற மருத்துவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நயன்தாராவின் திருமணத்திற்காக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் நயன்தாராவின் நடிப்புத் திறமையை பாராட்டுகிறேன். அனால் 40 வயதாகும் நயன்தாராவால் தற்போது எப்படி குழந்தை, குடும்பம் என அனைத்தையும் பார்த்துக் கொள்ள முடியும் எனவும் கண்டிப்பாக நயன்தாரா வாடகை தாய் மூலமாக மட்டுமே குழந்தை பெற்றுக் கொண்டால் நல்லது எனவும் தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்த பிரபல பாடகி சின்மயி, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக பல மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில், ஒரு கருத்தரிப்பு மையத்தில் பணிபுரியும் மருத்துவரின், இந்த பதிவை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அதில் ஒரு நடிகையை பற்றி ஒரு மருத்துவராக இருந்துக் கொண்டு எப்படி இவ்வளவு கேவலமான கமெண்ட்டை பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது சின்மயியின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், நடிகை நயன்தாராவால் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா, முடியாதா என்ற விவாதமே ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாராவின் கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும் காரணத்தினால் திருமணம் முடிந்த கையோடு 6 மாதம் கேரளாவில் சிகிச்சை பெற உள்ளார் என்ற செய்தி வைரலானது.

இந்நிலையில் 37 வயதாகும் நயன்தாராவிற்கு, சிகிச்சை கை கொடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக வாடகைத்தாய் முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாடகைத்தாய் முறையை பயன்படுத்தி பிரபலா பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் குழந்தை பெற்றெடுத்து வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News