வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நயன்தாராவாக நடிக்கப்போகும் அனுஷ்கா.. இங்க வேகல அங்கையாது பருப்பு வேகுதானு பார்ப்போம்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா கதைகளை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் டோரா, மூக்குத்திஅம்மன் ,அறம் ,மாயா போன்ற பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்று தந்தது. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த வாரம் நயன்தாராவின் நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வெற்றியை பெறவில்லை. படம் போர் அடிப்பதாக ரசிகர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன.

anushka-cinemapettai
anushka-cinemapettai

கொரிய மொழியில் 2011 இல் வெளிவந்த blind திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் நெற்றிக்கண் திரைப்படம். இதில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இத்திரைப்படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது .சமீபகாலமாக எந்த ஒரு புது படங்களிலும் அனுஷ்கா நடிக்க வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த வருடம் வெளிவந்த சைலன்ஸ் திரைப்படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாத காது கேளாத வராக நடித்திருந்தார். ஆனால் அது ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் கண் தெரியாதவர் போல இந்த படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. .தமிழில் நெற்றிக்கண் திரைப்படம் அதிக வரவேற்பு பெறவில்லை என்ற செய்தி அனுஷ்காவிற்கு சென்றால் என்ன செய்வாரோ ?பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News