Mookuthi Amman 2: ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு மூக்குத்தி அம்மன் படம் வெளிவந்தது. அதில் லேடி சூப்பர் ஸ்டார் அம்மன் வேடத்தில் கலக்கியிருந்தார். காமெடி தெய்வீகம் என பக்கா என்டர்டைன்மென்ட் படமாக அது இருந்தது.
அதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நயன்தாரா நடிப்பது மட்டுமே உறுதியாகி இருந்த நிலையில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இல்லை என்பதும் தெரியவந்தது.
இதற்கு தயாரிப்பு தரப்புக்கும் இவருக்கும் சில உள் பூசல்கள் என காரணமாக சொல்லப்பட்டது. அப்படி என்றால் வேறு யார் இயக்குனர் என அனைவரும் யோசித்த நிலையில் சுந்தர் சி தான் அது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 லேட்டஸ்ட் அப்டேட்
வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த ப்ராஜெக்ட்டுக்குள் சுந்தர் சி இணைந்திருப்பது பெரும் ஆச்சரியம்தான். வழக்கமா இவர் பேய் படங்களை தானே எடுப்பார்.
எப்படி திடீரென்று அம்மன் படத்திற்கு வந்தார் என ரசிகர்கள் ஜாலியாக வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்த வருடம் அரண்மனை 4 மூலம் கோலிவுட்டை மீட்டெடுத்த பெருமை இவருக்கு உண்டு.
அதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு தரமான வெற்றிக்கு அவர் தயாராகி விட்டார். யார் கண்டது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தமன்னா போல் ஓர் அழகான பேய் வந்து ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நயன்தாராவை இயக்க தயாராகும் சுந்தர் சி
- உட்கார இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்கும் ஆர் ஜே பாலாஜி
- ஆர் ஜே பாலாஜி இல்லாத மூக்குத்தி அம்மன் 2?
- மூக்குத்தி அம்மன் படத்தை அட்ட காப்பியடித்த ராஜா ராணி2