பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசனை சமீபத்தில் சந்தித்த பேட்டியாளருக்கு பல்வேறு சுவாரிஸ்யமான விடயங்களை கூறினார் தயாரிப்பாளர். 2010-ல் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்திய படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.
சந்தானத்தின் காமெடி ராஜேஷின் காமெடி நிறைந்த கதைக்களம் என அருமையான வந்து சேர்ந்தது அன்றைய இளைஞர்களிடத்தில் படம் கல்லூரி மாணவர்களால் வெகுவாய் ரசிக்கப்பட்ட இந்த படம் வசூலையும் ஓரளவு பெற்றது என்றால் மிகையாகாது. நயன்தாரா அப்போது வளர்ந்து வரும் நடிகை தான் இப்போது போன்று அவருக்கு என தனி மார்க்கெட் இல்லாத சமயம் அது. சம்பளமும் அவ்வளவாக உயர்த்தவில்லை நயன்தாரா.
எனினும் அப்போதே படக்குழு திட்டமிட்ட பணத்திற்குள் படத்தை முடிக்க முடியவில்லை. படத்தை வெளியிட தயங்கிக்கொண்டிருந்த படக்குழுவுக்கு தன் 50% சம்பளத்தை விட்டுக்கொடுத்திருந்தார் நயன்தாரா.
பிறகு தான் இப்படம் வெளியீடுக்கு தயாரானது. அதனை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் நண்பேன்டா போன்ற படங்களில் மீண்டும் இயக்குனர் ராஜேஷோடு பணியாற்றிய நயன்தாரா. இப்போது நினைத்தாலும் கண்ணில் நீர் வார்க்கிறார் என கூறியிருந்தார் தயாரிப்பாளர்.