புதன்கிழமை, ஜனவரி 15, 2025

5 வருடத்திற்கு பின் மீண்டும் மிரட்ட வரும் முட்ட கண்ணு வில்லன்.. நயன்தாராவை தலை தெரிக்க ஓடவிட்ட கொடூரன்

வில்லன்கள் தட்டுப்பாடு இருக்கும் தமிழ் சினிமாவிற்கு இப்பொழுது பல பாலிவுட் வில்லன்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக சஞ்சய் தத், ஜாக்கிசரப் போன்ற வில்லன்கள் தமிழில் கலக்குகின்றனர். இந்நிலையில் ஒரு பாலிவுட் நடிகர் ஒருவர் தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தலை காட்டி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

இவர் நடித்திருந்த அந்த ஒரே ஒரு தமிழ் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தலை தெரிக்க ஓட விட்டிருப்பார். நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் திரில்லர் படமாக வந்தது இமைக்கா நொடிகள் திரைப்படம். 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கினார். ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்ற இந்த படத்தில் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்திருப்பார்.

Also Read: நயன், அனுஷ்கா எல்லாம் காட்டுனா காட்டட்டும்.. அஜித் படத்தை தூக்கி எறிந்த அசினின் மிரட்டும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

இதில் முட்ட கண்ணுடன் கொடூர வில்லனாக காட்சியளித்து நயன்தாராவை மட்டுமல்ல படத்தை பார்ப்போரையும் மிரட்டி இருப்பார். இந்த படத்திற்கு பின் வேறு எந்த படங்களிலும் தலை காட்டாமல் இருந்த அனுராக் காஷ்யப் இப்போது மறுபடியும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறியப்பட்ட அனுராக், பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவருடைய பிளாக் ஃபிரைடே என்ற திரைப்படம் பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தது மட்டுமல்லாமல், ஏகப்பட்ட சர்ச்சைகளையும் கிளப்பியது. அனுராக் இப்பொழுது சசிகுமார் இயக்கப் போகும் குற்றப்பரம்பரை படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

Also Read: அஜித் இல்ல, சிவகார்த்திகேயனும் இல்ல.. அடுத்த ஹீரோவை வில்லங்கமான டைட்டிலுடன் உறுதி செய்த விக்கி

மிகப்பெரிய வெற்றி பெற்ற குற்றப்பரம்பரை நாவலை வெப் சீரிஸ் ஆக, 8 எபிசோடுகளாக உருவாகயுள்ள நிலையில் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் ராணா நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்திற்கான அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில் குற்றப்பரம்பரை படத்தின் பாலிவுட் வில்லன் அனுராக் காஷ்யப் 5 வருடங்களுக்குப் பின் தமிழ் படத்தில் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற விட்டுள்ளது.

Also Read: பாலிவுட் போயும் வேலையை காட்டிய அட்லி.. ரஜினி ஸ்டைலில் சண்டை போட்ட ஷாருக்கான், லீக்கான காட்சிகள்

Trending News