கவினுக்கு ஜோடி, அந்த ஹீரோவுக்கு அக்காவா.? இது என்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை!

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இப்போது மார்க்கெட் சரியாக இல்லை. திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிகளுக்கு மார்க்கெட் குறையும் என்பதுபோல நயன்தாராவுக்கும் கல்யாணத்திற்கு பின் வெளியான படங்கள் பெரிய அளவில் போகவில்லை.

பாலிவுட்டில் ஜவான் மட்டும் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் தொழில்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் இப்போது சில படங்களில் நயன்தாரா கமிட்டாகி இருக்கிறார். அதாவது இளம் நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு வருகிறார்.

அந்த வகையில் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தன்னைவிட 5 வயது குறைவாக உள்ள கவினுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

கவினுக்கு ஜோடியான நயன்தாரா

மற்றொருபுறம் இன்னொரு ஹீரோவுக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருகிறாராம். அதாவது கன்னடத்தில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் யாஷ். இவர் டாக்ஸி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், கியாரா அத்வானி மற்றும் தாரா சுதரியா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் முதலில் யாஷுக்கு அக்காவாக கரீனா கபூர் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களினால் அவர் நடிக்க முடியாமல் போன நிலையில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் சம்பளம் அதிகமாக கேட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது டாக்ஸி படப்பிடிப்பில் நயன்தாரா நடித்து வருகிறாராம். ஒருபுறம் யாஷுக்கு அக்கா, மறுபுறம் கவினுக்கு ஜோடி என்ன நயன்தாரா இதெல்லாம் என்று ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த படங்கள் நயன்தாராவின் மார்க்கெட்டை தூக்கி விடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டல்லடித்த நயன்தாராவின் மார்க்கெட்

பொழுதுபோக்கு