வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா லேட்டஸ்ட்.. வில்லங்கமான சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம்

நீண்ட நாட்களாகவே கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் செய்தி என்னவென்றால் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பது தான். விரைவில் இருவரும் சீக்கிரம் பிரிந்து விடுவார்கள் எனவும் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா பல்வேறு காதல் தோல்விகளுக்கு பிறகு கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.

இருவரும் செல்லுமிடமெல்லாம் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு பழைய காதலர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் இதேபோல் நயன்தாரா எத்தனை ஹீரோக்களுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா என கிண்டலடித்தனர்.

ஆனால் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. நான் நயன்தாராவின் காதலர், அவ்வளவுதான் என கெத்தாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பின.

ஒரு சிலர் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் எனவும், விரைவில் இருவரும் பிரிந்து விடுவார்கள் எனவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்ததை பார்த்து பார்த்திருக்கிறோம். ஆனால் தங்களைப் பற்றிய தவறான நெகட்டிவ் விமர்சனங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

தற்போது விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா.? இல்ல ஆடை அப்படி தெரிகிறதா.? என்பது போன்ற கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றன.

vignesh-shivan-nayathara
vignesh-shivan-nayathara

இந்த புகைப்படம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது திருமணத்துக்கு முன்னதாகவே நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா.? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளதாம்.

nayathara-photo
nayathara-photo

Trending News