திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கோடியில் சம்பளம்.. ரோட்டு கடையில் பேரம் பேசிய லேடி சூப்பர் ஸ்டார், டிரண்டாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் கோடியில் சம்பளம் வாங்குபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நயன்தாரா தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இதுதவிர அட்லி படம் மூலம் ஹிந்தி சினிமாவிலும் கால்பதித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கும் நயன்தாராவிற்கு மார்க்கெட் குறையவே இல்லை.

நயன்தாரா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவ்வாறு பல விதங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நயன்தாரா ரோட்டு கடை ஒன்றில் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள ரோட்டு கடை ஒன்றில் ஹேண்ட் பேக் வாங்கும் நயன்தாரா கடைக்காரரிடம் குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு பேரம் பேசுகிறார். கோடியில் சம்பளம் வாங்கினாலும் பெண்கள் எப்போதும் பெண்களாகத்தான் இருப்பார்கள் என்பதை நயன்தாரா நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் நயன்தாரா பேரம் பேசும் விதம் செம க்யூட்டாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ அந்த வீடியோ காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறுகிறார்கள். இருப்பினும் எது உண்மை என்பது தெரியவில்லை. ரோட்டு கடையில் நயன்தாரா

nayanthara-video
nayanthara-video

கோடியில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகை இப்படி ரோட்டு கடையில் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் பேரம் பேசுவது என்பது பெண்களுக்கே உரித்தான குணம் என சிலர் கேலி பேசி வருகிறார்கள்.

Trending News