வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு அடம் பிடிக்கும் சிங் நடிகை.. வாய் சவடாலால் போன பட வாய்ப்பு

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் படிப்படியாக முன்னேறி தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் தான் நயன்தாரா. அவ்வாறு இருப்பின் தற்பொழுது இவருக்கு நிகராக ஒரு நடிகை சம்பளம் கேட்டு வருவது பிரபலங்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

2012ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற படத்தில் அறிமுகமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அவ்வாறு இருக்க தற்பொழுது இவர் ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.

Also Read: ரஜினி, விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா.. பணத்தாசையால் ஷாரூக்கானிடம் சரண்டர்!

அதிலும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் பல பிரபலங்களோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தற்பொழுது தமிழில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தை கேட்பது பிரபலங்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.

அது மட்டுமல்லாது எங்களுக்கும் ரசிகர்கள் உண்டு எங்களை காணவும் அவர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று கூறி பெருமிதம் படுத்திக் கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து பெண்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் அவர்களுக்கும் திறமை உண்டு என்ற தன் ஆதங்கத்தை முன்வைத்து வருகிறார்.

Also Read: நயன், விக்கி போல இல்ல.. ஷார்ட்டாக மகனுக்கு பெயர் வைத்த அட்லீ

இதை தொடர்ந்து டாப் ஹீரோக்களான விஜய், அஜித் ஆகியோருக்கு கொடுக்கக்கூடிய சம்பளத்தை எங்களுக்கும் கொடுங்கள் என்று வாய் சவடால் விட்டு வருகிறார். மேலும் தன்னை நயன்தாரா ரேஞ்சுக்கு ஒப்பிட்டு சம்பளத்தை அதிகமாக தருமாறு கேட்டு வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்த இவர் இவ்வாறு கேட்பது சிரிக்க வைக்கும் விதமாக இருந்தாலும். மறுபுறம் இதைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் யாரும் வாய்ப்பு கொடுக்க முன்வராத நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அடுத்தடுத்து பறிபோன பட வாய்ப்பால் வெளியேறும் விக்கி-நயன்.. வேறு வழியில்லாமல் எடுத்த அதிரடி முடிவு

Trending News