நயன்தாரா சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பார்த்தால், அது புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. நயன்தாரா எந்த நேரம் தனுஷுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டாரோ.. அந்த நாளில் இருந்து இருவருக்கும் ஏழரை தான்.
இன்னும் சொல்லப்போனால், இந்த பிரச்சனையில், நயன்தாராவை விட விக்னேஷ் சிவன் தான் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ட்விட்டர்-லிருந்து வெளியேறும் அளவுக்கு ட்ரோல் செய்துவிட்டார்கள். இப்படி இருக்க நயன்தாரா சமீபத்தில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பெட்டியில், தான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததே தவறு என்று கூறி இருக்கிறார்.
விக்னேஷ் சிவனுடன் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள்..
நயன்தாரா கூறியதாவது, “நிறைய நேரங்களில் ஏண்டா கல்யாணம் பண்ணோம்னு யோசிச்சுருக்கேன்.. நான் திருமணம் செய்ததை நினைத்து நிறைய முறை வறுத்தபட்டிருக்கிறேன். என்னை எல்லோரும் விக்னேஷ் சிவனுடன் ஒப்பிட்டு பேசுவது வருத்தமளிக்கிறது. அது அர்த்தமற்றதாகவும் இருக்கிறது.”
“விக்னேஷ் சிவனிடம் நிறைய திறமை உள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குனர், நல்ல பாடலாசிரியர். அவரிடம் பல்வேறு திறமை இருந்தும், எங்கள் திருமணத்துக்கு பின் பல நேரங்களில் அதை வெளிக்கொண்டு வர முடியாமல் இருக்கிறாரோ என்று தோன்றும்.. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்யவில்லை என்றால், எல்லோரும் அவரை அடையாளம் கண்டிருப்பார்கள்..”
“அவருக்கு என்று ஒரு பெயர் தனியாக இருந்திருக்கும். அவரை மக்கள் போற்றி இருப்பார்கள். எங்கள் திருமணம் முடிந்ததால், அவரை பலர் என்னுடன் ஒப்பிட்டு, அந்தஸ்து என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஏன் இந்த அந்தஸ்து போன்ற விஷயங்களை எல்லாம் பார்த்து தான் திருமணம் செய்யவேண்டுமா.. ?” என்று பேசியுள்ளார்.
இவர் இப்படி பேசியதை தொடர்ந்து, பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சில அதிபுத்திசாலிகள் மட்டும், இதிலும் தவறு கண்டுபிடித்து, ‘அப்போ உங்க வெளிச்சம் அதிகமா இருக்குறதுனால அவர் தெரியவில்லை என்று கூறுகிறீர்கள்.. சரி தானா?’ என்றும் எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள்.