தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் செய்தி சினிமா வட்டாரங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
மலையாள வரவான நயன்தாரா ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் அனைத்து நடிகைகளும் செய்வதைப்போல கிளாமருக்கு மாறினார். அதுவும் உங்க வீட்டு கிளாமர், எங்க வீட்டு கிளாமர் இல்ல, உங்கொக்கா மக்கா கிளாமர் தான்.
அந்த கால கட்டங்களில் வந்த வில்லு, பில்லா, சத்யம் போன்ற படங்களில் எல்லாம் தாறுமாறாக வந்திருப்பார். அதுவும் அஜித்துடன் நடித்த ஏகன் மற்றும் ஆரம்பம் படம் எல்லாம் கிளாமரில் அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.
ஆனால் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா கொஞ்ச நாட்களாகவே கிளாமருக்கு தடை போட்டுள்ளார். மேலும் பெரிய பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு மட்டும் கிளாமர் போஸ் கொடுத்து வந்தார்.
அதனைப் பார்த்த பாலிவுட் சினிமாக்காரர்கள் ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் நயன்தாராவை பில்லா படத்தில் நடித்ததை போல நீச்சல் உடை மாற்றும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க வைக்க பல கோடி பணத்துடன் நயன்தாராவை அணுகி உள்ளனர்.

ஆனால் நயன்தாரா இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என மூஞ்சியில் அடித்தது போல் கூறிவிட்டாராம். இதனால் நயன்தாராவை நம்பி வந்த நிறுவனம் ஏமாற்றம் அடைந்து விட்டதாம்.