சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தேனிலவுக்கு எங்க போறீங்க.. வெட்கச்சிரிப்புடன் பதிலளித்த நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த வாரம் தன்னுடைய நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை படு விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா, விக்னேஷ் சிவன் உடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதை தொடர்ந்து நயன்தாரா செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நயன்தாராவின் திருமணத்தில் சில முக்கிய பிரபலங்கள் தவிர செய்தியாளர்கள் மற்றும் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நயன்தாரா செய்தியாளர்களை தனியாக சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது நயன்தாராவிடம் திருமணம் நடைபெற்றது குறித்து ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது. அவை அனைத்திற்கும் மிகவும் சந்தோஷத்துடன் சிரித்த முகமாக நயன்தாரா பதிலளித்தார். அதில் ஒரு செய்தியாளர் நயன்தாராவிடம் மேடம் ஹனிமூன் எங்க போறிங்க என்று கேட்டார்.

இதற்கு நயன்தாரா வெட்கம் கலந்த சிரிப்புடன் விக்னேஷ் சிவனை பார்த்தார். ஆனால் செய்தியாளரின் அந்த கேள்விக்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. ஏனென்றால் நயன்தாராவின் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அதிலும் ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடிக்கும் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் நயன்தாரா கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் திருமணத்திற்கு பிறகு பிறந்த வீடு, புகுந்த வீடு என்று பிஸியாக இருக்கும் நயன்தாரா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நேர்த்திக் கடனை செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறார். இப்போது கேரளாவில் இருக்கும் இந்த தம்பதிகள் அங்கும் சில கோயில்களுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News