Nayanthara: ‘கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க’. அப்படி ஒரு விஷயத்தை தான் நயன்தாரா செஞ்சி இருப்பதாக இப்போது இணையவாசிகள் கொதித்து இருக்கிறார்கள்.
நடிகை நயன்தாரா சமீபத்தில் அனுப்பமா சோப்ராவின் இன்டர்வியூவில் கலந்து கொண்டார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
இந்த பேட்டியில் தான் வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்களை குரங்குகள் என விமர்சித்தது கூட.
இது இன்டர்நேஷனல் சேனல் என்பதால் அவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் நயன்தாரா பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அப்படித்தான் தனுஷ் பற்றிய கேள்வி கேட்க கூட அவர் விளக்கம் அளித்து இருந்தார். அதே பேட்டியில் பிரபுதேவா உடனான காதல் பற்றியும் கேட்கப்பட்டது.
பிரபுதேவா இயக்கி விஜய் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த வில்லு பட சமயத்தில் இவர்களுக்கு காதல் மலர்ந்தது.
பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்ற பெண்ணை திருமணம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மூன்று குழந்தைகளுக்கு அப்பா ஆகி இருந்தார்.
ரொம்ப ஃபேக்காக இருக்கு மேடம்!
நயன்தாராவுடன் காதல் கணிந்த பிறகு இருவரும் எல்லா சினிமா விழாக்களிலும் ஜோடியாக சுற்ற ஆரம்பித்தார்கள்.
சென்னையில் ஒரு பிளாட்டில் ஒன்றாக தங்கி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த காதல் திருமணம் வரை சென்று பின்னர் முடிவுக்கு வந்தது.
நயன்தாரா பிரபுதேவாவை வேண்டாம் என்று சொன்னாரா அல்லது பிரபுதேவா கழண்டு கொண்டாரா என இதுவரை சரியாக தெரியவில்லை.
இதுவரை மீடியாக்களில் வெளியான செய்திகளில் தன்னுடைய குழந்தைகளை நயன்தாரா பார்க்க அனுமதிக்காததால் இந்த பிரிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பேட்டியில் நயன்தாரா தன் தரப்பு நியாயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது அப்போது சினிமாவைப் பற்றி நயன்தாராவுக்கு எதுவுமே தெரியாதாம்.
அப்போது சினிமா பிரபலங்கள் இரண்டு திருமணம் செய்து கொள்வது, திருமணமானவரை காதலிப்பது விவாகரத்து ஆனவரை திருமணம் செய்வது என எல்லாவற்றையும் பார்த்து இருக்கிறாராம்.
அதனால் தான் அவருக்கு இது தப்பு இல்லை என்று தோன்றியது. எல்லாம் சரி எதற்காக மனைவியை விவாகரத்து செய்ய சொன்னார் என தற்போது இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் நான் எதிர்பார்த்த அன்பு பிரபுதேவாவிடம் கிடைத்தது அதனால் நான் அவரை காதலித்தேன் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ள முடியும்.
இது போன்ற ஒரு பதிலை நயன்தாரா சொல்லி இருக்கக் கூடாது என தற்போது கருத்து தெரிவித்து வருகிறார்கள்.