வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடேங்கப்பா! அசைவ மாமியாக நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் தெரியுமா? கடைசில மொத்தமும் புட்டுக்கிச்சு!

Actress Nayanthara: நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடித்த நேரடி தமிழ் படங்களான கனெக்ட் மற்றும் இறைவன் போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தரவில்லை. கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக நயன்தாரா தமிழ் சினிமாவில் ஃபீல்டு அவுட் ஆன கதாநாயகியாக தான் இருக்கிறார். தற்போது ரிலீசாக இருக்கும் அன்னபூரணி படம் தான் அவருடைய தமிழ் மார்க்கெட்டின் உண்மை நிலவரத்தை சொல்லப் போகிறது.

முன்னணி ஹீரோக்கள் ஆன அஜித், விஜய் போன்றவர்கள் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் திரிஷாவுக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நயன்தாரா சோலோ ஹீரோயினாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருக்கும் குடும்பத்திலிருந்து, தன்னுடைய கனவை ஜெயிக்க போராடும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறார்.

Also Read:இந்த வருட கடைசி மாதத்தில் சிக்ஸர் அடிக்க காத்திருக்கும் 6 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பிய அன்னபூரணி

நயன்தாராவை பொறுத்த வரைக்கும் அவருக்கு மார்க்கெட் இருக்கிறதோ இல்லையோ, லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பிம்பத்திற்காகவே அவருக்கு சம்பளம் எக்கச்சக்கமாக கொடுக்கப்படுகிறது. கடைசியாக நயன்தாரா நடிப்பில் ஜவான் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நயன்தாரா 11 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார்.

நயன்தாரா வாங்கிய சம்பளம்

தற்போது அன்னபூரணி படத்திற்காக அவர் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 50 கோடி என சொல்லப்படுகிறது. இதில் 10 கோடி நயன்தாராவின் சம்பளம் ஆகும். பாலிவுட்டில் 11 கோடி வாங்கி இருந்த நயன், தமிழ் சினிமாவிற்காக ஒரு படி கீழே இறங்கி இருக்கிறார்.

அன்னபூரணி படத்தின் ரிசல்ட்டை வைத்து தான் நயன்தாரா அடுத்தடுத்து சம்பளத்தை உயர்த்துவாரா என்பது தெரியும். என்னதான் தனிக்கதாநாயகியாக நடித்தாலும், இனி தமிழில் நயன்தாரா முன்னணி ஹீரோக்களுடன் இணைவதற்கு வாய்ப்புகள் கம்மியாகத்தான் இருக்கும். த்ரிஷாவின் சம்பளம் ஒரு பக்கம் ஏறிக் கொண்டிருக்கும் நேரத்தில், நயன் எப்படியாவது தமிழில் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

நயன்தாரா இனி பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது சந்தேகம்தான் என்று நன்றாகவே தெரிகிறது. அன்னபூரணி படத்திற்காக அவர் வாங்கிய 10 கோடி சம்பளம் தான் முதலும் கடைசியும் கூட. இனி சம்பளத்தை குறைத்துக் கொண்டால்தான் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும். கெத்தாக அன்னபூரணி படத்தில் கம்பேக் கொடுக்க நினைத்தாலும் மார்க்கெட் சரிந்தது சரிந்தது தான்.

Also Read:டிசம்பர் மாதத்தில் வெளிவரவுள்ள 5 முக்கியமான படங்கள்.. தடையை தாண்டுமா துருவ நட்சத்திரம்?

Trending News