சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

லேடி சூப்பர் ஸ்டாரா.? ஆள விடுங்க, பொறாமையில் பொங்கும் நயன்தாரா

Actress Nayanthra: லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டும் நயன்தாரா ஹீரோக்களுக்கு இணையான அந்தஸ்துடன் வலம் வருகிறார். இவர் வைத்தது தான் சட்டம் என்னும் அளவுக்கு இவருடைய செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இப்போது அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே தெறித்து ஓடுகிறாராம்.

சமீபத்தில் இவர் அன்னபூரணி பட பிரமோஷனுக்காக ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தான் லேடி சூப்பர் ஸ்டாரென்று கூப்பிடாதீங்க, வேண்டவே வேண்டாம். அப்படி சொன்னாலே எல்லாரும் திட்டுறாங்க. அதனால வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார்.

ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு இந்த பட்டமா என சிலர் பேசுகிறார்கள். அதனால் அப்படி சொல்லாதீங்க என விளக்கமும் கொடுத்தார். உண்மையில் இந்தப் பட்டம் இப்போது வேறு ஒருவருக்கு சொந்தமாகும் அபாயத்தில் இருக்கிறது. அந்த பொறாமையினால் தான் நயன் அப்படி கூறியிருக்கிறார்.

Also read: 68 வயது நடிகருடன் ஜோடி சேரும் த்ரிஷா.. வாய்ப்பு கிடைச்சா போதும் அதுக்குனு இப்படியா அம்மணி.?

அதாவது இவருடைய சமீபகால படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் இவருடைய அண்மைக்கால நடவடிக்கைகளும் சில விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. அதனாலயே ரசிகர்கள் இப்போது இவரை விட்டுவிட்டு த்ரிஷாவை கொண்டாடி வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் த்ரிஷாவும் இப்போது அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அவர் இப்போது படு பிஸியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அதனாலயே இப்போது அவரின் ரசிகர்கள் நீங்கதான் லேடி சூப்பர் ஸ்டார் என சோசியல் மீடியாவில் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து தான் நயன்தாரா இந்த பட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க என பேசி தன் பொறாமையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாக சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: காமெடி நடிகரிடம் அப்பட்டமாக தோற்றுப் போன நயன்தாரா.. பிரமோஷன் செஞ்சும் திருப்பி செய்த கர்மா

Trending News