ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடிக்கு மேல் அடி வாங்கியதால் ஜோசியரிடம் சரணடைந்த நயன்தாரா.. என்ன இப்படி சொல்லிட்டாரு

நயன்தாரா கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகியும் தற்போது வரை முன்னணி நடிகையாகவும் இவருக்கு இணையாக வேறு எந்த நடிகையும் வர முடியாது என்ற சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய உச்சத்திற்கு சென்று விட்டார். அதிலும் இவரே ஒரு லக்கி சாம் என்றும் திரையுலகில் பார்த்து வருகிறார்கள். இவர் வந்து நடித்தால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று அவர்கள் மனதில் பதிந்து விட்டது.

அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் நேரம் சரியில்லாமல் தவித்து வருகிறார். அதற்கு என்ன பரிகாரம் செய்வதென்று யோசித்து அதற்கேற்ற மாதிரி குலதெய்வ கோவிலிலும் வழிபாடு பூஜை செய்து வந்திருந்தார். ஆனாலும் கொஞ்சம் கெட்ட நேரம் வாட்டி வதைக்கிறது. அது இவருக்கு மட்டும் இல்லாமல் இவரை கட்டிக்கிட்டு வந்த விக்னேஷ் சிவனையும் ஆட்டிப் படைக்கிறது. இவருடைய குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறதாம்.

Also read: அப்பவே த்ரிஷாவுக்கு போட்டி நயன்தாரா இல்லையாம்.. ஒழித்துக் கட்ட வந்த நடிகையை சிங்கிளாக துவம்சம் செய்த மாமி

சமீபத்தில் இவருடைய கணவர் விக்னேஷ்க்கு அஜித் கூட இருந்த ப்ராஜெக்ட் கைநழுவி போய்விட்டது. தொடர்ந்து அடிமேல் அடிவாங்கி வந்த நிலையில் இதற்கெல்லாம் தீர்வாக இவர் எடுத்த முடிவு தான் ஜோசியம். இவருடைய ஆஸ்தான ஜோசியரை சந்தித்து பிரச்சனைக்கான தீர்வை அடைய சென்று இருக்கிறார்.

ஆனால் அங்க போன நயன்தாராவுக்கு ஷாக் கொடுக்கிற அளவுக்கு ஒரு விஷயத்தை சொல்லிவிட்டார். அதாவது எல்லா பிரச்சனைக்கும் காரணம் உங்களுடைய பெயர் தான். பெயர் ராசி சரியில்லாததால் எல்லா பிரச்சனைக்கும் குழப்பம். அதனால் உங்கள் பெயரை மாற்றிக் கொண்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: ஜீவா அப்பாவிடம் பயங்கரமா திட்டு வாங்கின நயன்தாரா.. படப்பிடிப்பு நிற்கும் நிலையில் இருந்த ஈ படம்

இதை கேட்ட நயன்தாரா அது எப்படி பெயரை மாற்றினால் நேரம் சரியாகிவிடும் என்ற சந்தேகத்தில் யோசித்து வருகிறார். இவர் சொல்வது எப்படி இருக்குன்னா கண்ணாடி திருப்புனா ஆட்டோ நல்லா ஓடிவிடும் என்ற கதையாக இருக்கிறது. ஒருவேளை இப்படி இருக்குமோ சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தை ஜோசியர் நல்லா பார்த்திருப்பாரோ.

அதனுடைய தாக்கம் தான் நயன்தாராவிற்கு சொல்லி இருக்கிறார். பார்க்கலாம் இதை கேட்டு நயன்தாரா என்ன முடிவு எடுக்கப் போகிறார். அல்லது இவருடைய ஆஸ்தான ஜோசியர் சொன்னபடி இவரின் பெயரை மாற்றிக் கொண்டால், இவருடைய குழந்தைகளுக்கு பெயர் வைத்தது போல் இவருக்கும் கூடிய விரைவில் பெயர் சூட்டு விழா நடக்க இருக்கும். ஆனாலும் இதுல ஒரு சந்தேகம் என்னன்னா பெயர் சரியில்லாமல் தான் 20 வருஷமா முன்னணி நடிகையாக இருந்திருக்கிறார் அது எப்படி சாத்தியம்.

Also read: 5 வருடங்களாக ஆப்பு அடிக்கும் அட்லி.. மார்க்கெட்டை இழந்து தவிக்கும் நயன்தாரா

Trending News