புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வலைபேச்சு 3 குரங்குகள் என அசிங்கப்படுத்திய நயன்தாரா.. தனுஷ் மாதிரி காசுக்காக பண்றாங்க

Nayanthara: நயன்தாரா எது செய்தாலும் அது சர்ச்சையில்தான் முடிகிறது. அப்படித்தான் தனுஷுக்கு எதிராக அவர் விட்ட மூன்று பக்க அறிக்கை பிரளயத்தை உண்டு பண்ணியது.

அது பல்வேறு விதமாக வெடித்த நிலையில் மீண்டும் ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது. அதாவது அவர் ஹாலிவுட் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் வலைப்பேச்சு மூன்று பிரபலங்கள் பற்றி அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். youtube சேனல்களில் இவர்கள் மிகவும் பிரபலமானவர்கள்.

சினிமா செய்திகள் மட்டுமல்லாது பிரபலங்களின் பல்வேறு தனிப்பட்ட விஷயங்களை கூட இவர்கள் அலசுவர்கள். அப்படித்தான் சிவகார்த்திகேயன் குறித்து அவர்கள் வைத்த குற்றச்சாட்டு பரபரப்பானது.

தனுஷ் மாதிரி காசுக்காக பண்றாங்க

அதேபோல் தனுஷ் நயன்தாரா விவகாரத்திலும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள். அதில் நயன்தாரா வேண்டும் என்று இதை செய்கிறார் என்றும் விக்னேஷ் சிவன் மீதும் கூட குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள்.

மேலும் நானும் ரவுடிதான் படத்தால் தனுசுக்கு ரொம்பவும் பிரச்சனை கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்கள். அந்தக் கோபத்தை தற்போது நயன்தாரா வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்று குரங்குகள் என அவர்களை விமர்சித்துள்ளார். அவர்களுடைய 50 எபிசோடுகளில் 45 என்னைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

என் மூலம் அவர்கள் புகழையும் பணத்தையும் பெறுகிறார்கள். இந்த மூன்று குரங்குகள் கெட்டதை தான் பேசும் கெட்டதை தான் பார்க்கும் கெட்டதை தான் கேட்கும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வலைப்பேச்சு பற்றி சில பிரபலங்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். அதில் நயன்தாரா வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட தனுஷ் போல் இவர்களும் பணத்துக்காக தான் இதை செய்கிறார்கள் என நாசுக்காக தெரிவித்துவிட்டார். நிச்சயம் இதை வலைப்பேச்சு பிரபலங்கள் இன்று மாலை தங்கள் சேனல்களில் கிண்டலாக பேசுவார்கள் என்பது மட்டும் உறுதி.

Trending News