ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்த தோல்வி திரைப்படங்களின் மூலம் துவண்டு போன ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள அவர் இப்போது இறைவன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தான் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஹமத் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் லவ், ரொமான்ஸ், திரில்லர் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டு உருவாக இருக்கிறது.
Also Read : வில்லியாக நடித்து கெரியரை தொலைத்த 5 நடிகைகள்.. நயன்தாராவிற்கு சக்களத்தியாக மாற துடித்த ரீமா சென்
ஏற்கனவே இது குறித்து பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது பட குழு அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. அதில் ஜெயம் ரவி முகத்தில் ரௌத்திரத்துடன் காணப்படுகிறார். இதிலிருந்து இந்த படம் பயங்கர மிரட்டலாக இருக்கும் என்று தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் தனி ஒருவன் திரைப்படத்தை தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இந்த ஜோடி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த படத்தைப் போலவே ரசிகர்களை ஏமாற்றாத வகையில் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : நயன்தாராவும் இல்ல த்ரிஷாவும் இல்லை.. அஜித்துடன் இணைய போகும் பாலிவுட் ஹீரோயின்
மேலும் நயன்தாரா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக பங்கேற்கும் படத்தின் சூட்டிங் இதுதான். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த போஸ்டரை நடிகர் கார்த்தி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் வெளிவர இருக்கும் இந்த படம் நயன்தாராவிற்கு நிச்சயம் ஒரு வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் கடந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. சமீபத்தில் வெளிவந்த கனெக்ட் படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதனாலேயே இந்த படத்தில் அவர் ஆர்வத்துடன் நடிக்க சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : நயன்தாரா திமிரை எல்லாம் மிஞ்சிய திமிரு.. சி.எம் தோரணையில் புது நடிகை