புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நயன்தாரா காலை வார, சமந்தா எண்ணை ஊற்ற.. வழுக்கி கொண்டே போகும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் தனித்தனியாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வவந்தாலும் இவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்த பெருமை விக்னேஷ் சிவனை சேரும். இத்தனை ஆண்டு காலமாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்த இவர்களை வைத்து தற்போது விக்னேஷ் சிவன் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தின் மூலம் இணைத்து விட்டார்.

சமீபத்தில் கூட நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி மூவரும் பேருந்து நடித்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை பார்த்துவிட்டு விஜய் சேதுபதி ரசிகர்கள் ஒரே குஷியில் இருந்தனர். ஏனென்றால் இரண்டு கதாநாயகிகளை காதலித்து காமெடியில் கலக்கி இருக்கிறாராம்.

நயன்தாரா எப்போதும் தனது காதல் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருப்பார். ஆனால் நயன்தாராவினால் தற்போது விக்னேஷ் சிவன் சிக்கலில் மாட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலில் நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் சம்மதம் கேட்டுவிட்டு தான் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல 2 காதல் படத்தின் ஷூட்டிங் தேதியை முடிவு செய்தார்.

vignesh shivan nayanthara
vignesh shivan nayanthara

இத்தனை நாட்களாக ஒன்றாக நடித்து வந்த இவர்கள் தற்போது அவர்களது படங்களில் கவனம் செலுத்துகிறார்களாம். அதாவது நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதியை விட, அட்லி மற்றும் ஷாருக்கான் பெரிய பிரபலங்கள் என்பதால் நயன்தாரா அட்லி படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் சமந்தாவிற்கு தெலுங்கில் ஏராளமான படங்கள் நடிப்பதற்கு வரிசையாக இருப்பதால் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் தற்போது விக்னேஷ் சிவன் கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் தனது காதலி சோதிக்கிறார், மறுபக்கம் சமந்தா சோதிக்கிறார். இரண்டு பேருக்கு இடையில் மாட்டி விக்னேஷ் சிவன்தான் பதட்டத்தில் இருக்கிறார். ஆனால் நயன்தாரா கண்டிப்பாக தன் காதலனின் கவலையை புரிந்து கொண்டு சமந்தாவிடம் பேசி இவர்கள் இருவரும் இணைந்து கூடிய விரைவில் படத்தில் நடிப்பார்கள் என கூறிவருகின்றனர்.

Trending News