வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தனுசுக்கு பயத்தை காட்ட வெளிவந்த வீடியோ.. புது அவதாரத்தில் மிரட்டும் நயன்தாரா, டைட்டில் டீசர் எப்படி இருக்கு.?

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என கெத்தாக வலம் வரும் நயன்தாரா இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இரண்டு வருட காலமாக தாமதமான அவருடைய திருமண வீடியோ ஆவண படமாக இன்று வெளியாகி உள்ளது. அது மட்டும் இன்றி அவருடைய புது பட டைட்டில் டீசர் படு மிரட்டலாக வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்துவரும் நயன்தாரா தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் ராக்காயி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.

கோவிந்த் வசந்தா இசையில் டீசர் ரத்தக்களரியாக உள்ளது. இதன் ஆரம்பத்திலேயே குழந்தை அழுவது போல் காட்டப்படுகிறது. அதை அடுத்து கை நிறைய மிளகாய் எடுத்து உரலில் போட்டு இடிக்கும் நயன்தாரா குழந்தைக்கு பாலாடையில் பால் கொடுத்து உறங்க வைக்கிறார்.

ராக்காயி ஆக மாறிய நயன்தாரா

அதன் பின்னணியில் அவருடைய வீட்டைச் சுற்றி பல பேர் கையில் தீப்பந்தத்துடன் அவரை தாக்குவதற்காக நிற்கின்றனர். யாருமில்லாத தனி இடத்தில் வசிக்கும் அவர் எதிரிகளை பந்தாட கையில் அருவாளுடன் தைரியமாக நிற்கிறார்.

அதை அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அத்தனை பேரையும் வெட்டி சாய்க்கும் அவர் ரத்தம் தெறிக்கும் முகத்துடன் ஆக்ரோஷமாக இருப்பது போல் டீசர் முடிகிறது. சிவப்பு நிற புடவை கருப்பு நிற ஜாக்கெட் தலை முடியை கொண்டையிட்டு அவர் நிற்கும் கோலம் நிச்சயம் புது அவதாரம் தான்.

மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது இது நிச்சயம் கிராமத்து கதை களம் அதிலும் பல வருடங்களுக்கு முந்தைய காலகட்டமாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்தில் கூட அனுஷ்கா நடிக்கும் புது படத்தின் க்லிம்ஸ் வீடியோவும் இதே போல் தான் இருந்தது.

ஆக மொத்தம் பிறந்த நாளில் தனுஷுக்கு பயத்தை காட்ட இப்படி ஒரு வீடியோவை நயன்தாரா களமிறக்கி உள்ளார். நிச்சயம் இப்படம் வேற லெவலில் வெற்றி பெறும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Trending News