சினிமா என்றாலே பணம் புகழ் என்ற மோகம் அதிகம் தான். எவ்வளவுக்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் அவ்வளவு புகழ் வரும் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த வகையில் நடிகை நயன்தாரா அநியாயத்திற்கு பணத்திற்கு அடிமையாகி விட்டதாக பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இன்றைய தேதிக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். ஒரு படத்திற்கு சுமார் 6 கோடிக்கு மேல் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் நயன்தாரா. நமக்கு தெரிந்ததெல்லாம் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்களை வாங்கி வெளியிடுவது தான்.
ஆனால் அதையெல்லாம் விட துபாயில் தன்னுடைய கேரள நண்பர்கள் மூலம் நிறைய தொழில்களில் பணம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர். அதிக அளவில் துபாயில் முதலீடு செய்து வருகிறாராம் நயன்தாரா. அவருக்கு ஹாலிவுட் நடிகைகள் போன்று அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம்.
இதனால் கிடைக்கும் சின்னச் சின்ன பிசினஸில் கூட அதிக ஆர்வம் எடுத்து பணத்தை போட்டு வருகிறாராம். இது கூடவே நல்ல நல்ல படங்களை தயாரித்து வெளியிடுவதிலும் ஆர்வமாக இருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா சினிமாவில் போதும் என்கிற அளவுக்கு சாதித்து விட்டார். அவருக்கு ஒரு தொழில் அதிபராகவும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.
கண்டிப்பாக வருங்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபர் பெண்மணியாக துபாயில் கொடிகட்டி பறக்கப் போகிறார் நயன்தாரா என இப்போதே அவரது வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளது. நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற படம் வெளியாக உள்ளது.
![nayanthara-vignesh-shivan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/10/nayanthara-vignesh-shivan.jpg)