சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விக்னேஷ் சிவன், நயன்தாரா கல்யாணத்துக்கு வல்லவன் பட CD கொடுக்கும் சிம்பு.. வைரலாகும் மீம்ஸ்கள்

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் என்ற திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இதற்காக விஜய் டிவியில் நடத்தப்பட்ட நெற்றிக்கண் புரமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார்.

வழக்கம்போல் செலிபிரிட்டிகளை பேட்டி எடுப்பதற்காக பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். நயன்தாரா மீது நீண்ட நாட்களாகவே தயாரிப்பாளர்கள் சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால், சொந்தப்படம் என்றால் புரோமோஷன்களில் ஆர்வம் காட்டும் நயன்தாரா மற்றவர்களின் படங்களுக்கு ஓரவஞ்சனை செய்வது ஏன் என்பதுதான்.

nayanthara-memes
nayanthara-memes

இது ஒருபுறமிருக்க அந்த நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி நயன்தாரா கையில் போட்டிருந்த மோதிரத்தை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு நயன்தாரா, எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த போது போடப்பட்ட மோதிரம் தான் இது எனவும் பதில் சொல்லியிருந்தார் நயன்தாரா.

nayanthara-memes-02
nayanthara-memes-02

இது போதாதா நம்ம நெட்டிசன்களுக்கு. வழக்கம்போல் நயன்தாராவின் முன்னாள் காதலர்களான சிம்பு, பிரபுதேவா போன்றோரை வைத்து இணையத்தில் பல தரப்பட்ட மீம்ஸ்கள் ரெடி செய்து வெளியிட்டு வருகின்றனர்.

nayanthara-memes-03
nayanthara-memes-03

அதிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு நடக்கும் வரவேற்பு விழாவுக்கு சிம்பு வல்லவன் படத்தின் சிடியை பரிசாகக் கொடுப்பது போல் உருவாக்கிய மீம்ஸ் ஒன்று இணையத்தில் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

nayanthara-memes-04
nayanthara-memes-04

வல்லவன் படத்தில் நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் படுக்கையறை காட்சியில் புகுந்து விளையாடி இருப்பார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் நம்ம ரசிகர்கள். இதேபோல் நயன்தாராவுடன் பிரபுதேவா, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் இருப்பது போலவும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending News