தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் முன்னணி நடிகை தான் நயன்தாரா. இவருடைய படங்கள் என்றால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறுவது வழக்கம்.
அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் நயன்தாரா, கடந்த சில மாதங்களாக தன்னுடைய காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவதுடன் அப்போது எடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
ஏனென்றால் 2015ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவத்திற்கும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது அனைவரும் அறிந்ததே.

எனவே நயன்தாரா, தற்போது ஒரு ஹோட்டலில் எடுத்திருக்கும் புகைப்படத்தில் ஷாட் டாப் மட்டும் அணிந்திருக்கும் உடையில் விக்னேஷ் சிவத்துடன் எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

இதில் இருவரும் ஒன்றாக இணைந்த படி நெருக்கமாக காட்சியளிப்பதை பார்க்கும் ரசிகர்களுக்கு வயிறு எரிகிறது.
மேலும் இவர்கள் தங்களுடைய புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எடுத்திருக்கும் புகைப்படமாக இருக்கலாம் என்பதால் அவர்களுக்கு பலர் தரப்பிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.