வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

எலிசபெத் ராணி போல் பந்தா காட்டும் நயன்தாரா.. வாயை பிளக்க வைக்கும் கோடிகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூன்று பேரை காதலித்து கடைசியாக விக்னேஷ் சிவனை காதலித்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு கஷ்டப்பட்டு விமர்சையாக திருமணத்தை முடித்தார்கள். இன்று இந்த ஜோடி திருமணமான சந்தோஷத்தை வெளிநாடுகளில் சுற்றி அதனை போட்டோவாக எடுத்து மக்களுக்கு காண்பித்து வருகிறார்கள். எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள் இந்த ஜோடி.

இந்த ஜோடி காஸ்ட்லியான ஜோடி என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் செலவு செய்தால் கூட கோடியில் செலவு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் தனி விமானத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவிற்கு கைக்கடிகாரம் ரொம்ப மிகவும் பிடிக்குமாம். இப்பொழுது இவர் கையில் கட்டி இருக்கும் ஒரு கைக்கடிகாரத்தின் விலை 1.20 கோடி மதிப்புடையது. இதுபோல் விலை உயர்ந்த கடிகாரங்கள் இவர் 120க்கு மேல் வாங்கி வைத்துள்ளாராம்.

எங்கு சென்றாலும் கைக்கடிகாரம் வாங்கி விடுவாராம். அதேபோல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நேரத்தில் அதில் வேலை செய்யும் அனைவருக்கும் கைகடிகாரம் வாங்கி கொடுப்பது நயன்தாராவின் வழக்கமாக இருக்கிறது.

இவர்கள் இப்பொழுது போயஸ் கார்டனில் காஸ்ட்லி அப்பார்ட்மெண்டில் இரண்டு தளங்களை விலைக்கு வாங்கி வைத்துள்ளனர். இந்த வீட்டின் உட்புற அழகிற்கு மட்டும் செய்யப்படும் செலவு 25 கோடி, குளியலறை மட்டும் 1500 sq அந்த பாத்ரூமில் ஒரு ஸ்விம்மிங் ஃபுல், நீர்வீழ்ச்சி போன்றவை அடங்கும். அப்போ வீட்டின் விலை என்னவாக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு இந்த காஸ்ட்லியான ஜோடி செய்யும் செயல்கள் அனைத்தும் பிரமாண்டமாக இருக்கிறது.

என்னதான் இவர்கள் செய்வது அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தாலும் பல பேர் இவர்களை வீடியோ கேலி செய்து வருகிறார்கள். பரம்பரை பணக்காரர்கள் கூட இப்படி ஏதும் செய்ய மாட்டார்கள். இவர்கள் அடிக்கும் இந்த லூட்டி பல கேள்விகளை எழுப்புகிறது. எதுவரை செல்கிறார்கள் என்று பார்ப்போம் என கோலிவுட் வட்டாரம் காத்திருக்கிறது.

Trending News