ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு பிசினஸ் பண்ணும் நயன்தாரா.. காண்டான கோலிவுட்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு மொபைல் ஃபோன் எடுத்து உள்ளே போக அனுமதி இல்லை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நாளை நடைபெறவுள்ள இவர்களது திருமணம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இவர்களின் திருமணத்தின் வீடியோ மற்றும் புகைப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாகவும், இவர்களது திருமணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீடியோ எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே இவர்களது திருமணத்திற்கு வரும் பிரபலங்கள் யாரும் மொபைல் ஃபோன் எடுத்து வரக்கூடாது என்றும் அப்படியே எடுத்து வந்தாலும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பொதுவாக ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அதிகமான சொத்துக்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வைத்திருப்பார்கள். அவர்கள் தான் இது போன்ற பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் வைத்திருப்பர். அதுபோல பாலிவுட்டில் உள்ள பிரபலங்களின் திருமணமும் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற போது யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

ஆனால் தென்னிந்தியாவில் மட்டுமே பிரபலமடைந்த நடிகை நயன்தாரா, தனது திருமணத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிப்பது கொஞ்சம் ஓவராக உள்ளது என பல தரப்பினர் பேசி வருகின்றனர். இத்தனை வருடங்கள் கழித்து திருமணம் செய்யும்போது இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்து திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன உள்ளது என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதனிடையே நாளை நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள மாப்ஸ் என்ற பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுவதை அடுத்து, ரசிகர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணத்தை பார்ப்பதற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News