புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் முடிச்சு போடும் நேரம்.. முக்கியமான 200 புள்ளிகளுக்கு மட்டும் அழைப்பு

தமிழ் சினிமாவிற்கு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தன்னுடைய விடா முயற்சியினாலும் உழைப்பினாலும் தற்போது தமிழ் நடிகைகளின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் நீண்ட நாட்களாக இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதனால் இவர்களது திருமணம் வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் கோலாகலமாக நடைபெற உள்ளது என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் சென்னை அருகில் உள்ள மகாபலிபுரத்தில் இருக்கிற பிரைவேட் ரிசார்ட் ஒன்றில் ஜூன் 9-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கழுத்தில் முடிச்சு போடும் தருணம் நிகழவுள்ளது.

இவர்களது திருமணத்திற்கு சினிமா மற்றும் முக்கிய பிரமுகர்களாக மொத்தமாகவே 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரபலங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் உள்ளிட்டோர் மொத்தம் 30 பேருக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கின்றனர்.

திருமணத்திற்கு முன்பாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, திருமணத்திற்கு முந்தைய நாளான ஜூன் 8-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆகையால் ஜூன் 8 மற்றும் 9-ம் தேதி அன்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியை ஓடிடி தளத்தில் வெளியிட கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஏற்கனவே இவர்களது திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாகவே வைரலாகிறது. இதைப் பார்த்த நயன் மற்றும் விக்கி இருவரும் உற்சாகமடைந்த நிலையில், சமீபத்தில் கூட நயன்தாரா கும்பகோணத்திலுள்ள விக்கியின் குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டார்.

மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நயன் -விக்கி இருவரின் திருமணத்திற்கு வெறும் 200 புள்ளிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக திருமணத்தை நடத்தி முடிக்க விக்னேஷ் சிவன்-நயன்தாரா திட்டமிட்டிருக்கின்றனர்.

Trending News