புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரசிகையின் கைக்குழந்தையுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படம்.. குழம்பிப் போன ரசிகர்கள்

தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாக இருப்பவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் இவர், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா தனது திருமணம் விரைவில், ரகசியமாக நடைபெறும் என்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும், இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.

இதில் சமந்தா, நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் பஸ்ஸில் படியில் நின்றவாறு பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. நயன்தாரா என்ன செய்தாலும் வைரல், இவர் எங்கு சென்றாலும் கூட்டம்.

அப்படித்தான் சமீபத்தில் புதுச்சேரியில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சென்ற இவரை காண சொகுசு விடுதி முன்பாக ஒரு பெரிய கூட்டம் கூடியது. இந்நிலையில் நயன்தாரா கையில் குழந்தையுடன் விக்னேஷ் சிவன் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

vignesh-shivan-nayanthara
vignesh-shivan-nayanthara

மேலும், இந்த புகைப்படம் குறித்து வேறு எந்தஒரு விவரம் தெரியவில்லை. குழந்தை யாருடையது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Trending News