புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பல பிசினஸ், சொந்தமாக பிரைவேட் ஜெட்.. கோலிவுட்டின் பணக்கார ஜோடி விக்கி-நயன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா!

Nayanthara net worth: காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொல்வார்கள். அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.

மார்க்கெட் இருக்கும் வரை பணம் சம்பாதித்து விட்டு அதன் பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் சில நடிகைகள்.

ஒரு சிலர் நல்ல பணக்கார தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் நயன்தாரா தன் காதல் கணவரோடு சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறார்.

சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா!

இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தேனீர் பிசினஸ் மற்றும் லிப் பாம் கம்பெனியை ஆரம்பித்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு 9 ஸ்கின் என்ற காஸ்மெடிக் வியாபாரத்தை தொடங்கினார்கள். கடந்த விஜயதசமி அன்று ஃபேமி 9 என்ற நாப்கின் பிசினஸ் தொடங்கினார்கள்.

டிவைன் ஃபுட்ஸ் கம்பெனியில் தங்களுடைய முதலீடுகளை செலுத்தி இருக்கிறார்கள்.

நயன்தாரா தொடங்கும் ஒவ்வொரு தொழிலிலும் விக்னேஷ் சிவன் கோ பவுண்டர் ஆக நியமிக்கப்படுகிறார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

தற்போது நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு பத்து முதல் 12 கோடி சம்பளமாக பெறுகிறார்.

அதே மாதிரி இவருக்கு சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றும் இருக்கிறது. நடிகைகளில் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருப்பவர் இவர் மட்டும்தான்.

மெர்சிடிஸ் மேபேஜ், ஃபெராரி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களும் இவருக்கு இருக்கிறது. சென்னை எக்மோரில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிக்கு சொந்தமாக அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் விஐபி ஏரியாவான போயஸ் கார்டனில் நீச்சல் குளம், ஜிம் அமைப்புகளோடு ஒரு பெரிய சொகுசு பங்களாவை 100 கோடி செலவில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாராவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் 280 கோடி ஆகும். இதில் 50 கோடி விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு என குறிப்பிடப்படுகிறது.

நடிகை நயன்தாரா clive christian என்ற பெர்ஃபியூம் பயன்படுத்துகிறார். இதன் விலை 69,000 ஆரம்பிக்கிறது.

நயன்தாரா Rolex Oyster Perpetual என்ற பிராண்ட் வாட்சை உபயோகிக்கிறார். இதன் விலை 7 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

Trending News