ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நான் இல்லனா நயன்தாரா – விக்னேஷ் சிவன் கல்யாணம் இல்ல.. சூப்பர் நியூஸ் சொன்ன மெர்ச்சி சிவா

சினிமாவில் இவரது பட்டத்திற்கும் இவரது காமெடி சென்ஸூக்கும் யாருமே போட்டி போடவும் முடியாது. பொறாமைப்படவும் முடியாது என்பதற்கேற்ப நானே ராஜா, நானே மந்திரி வலம் வரும் நடிகர் தான் மிர்சி சிவா.

இவர் நடிப்பில் எம்.எஸ். அர்ஜூன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும். இப்படத்தில் ராதாரவி, எம். எஸ். பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெளிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கில் வரும் 13 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் டிரைலர் 3 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ள நிலையில் இப்படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2 கோடியில் எடுத்து, 35 கோடி லாபம் கொடுத்த சூது கவ்வும் முதல் பாகத்தைப் போல் இப்படமும் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் புரமோசன் பணிகளில் மிர்சி சிவா, கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொள்ள முக்கிய காரணமே நான் தான் என்று மிர்ச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மிர்சி சிவா அளித்த பேட்டியில் கூறியதாவது:

இதுகுறித்து பிரபல சேனலுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது; விக்னேஷ் சிவன் – நயன்தாரா இடையிலான காதல் உருவானதற்கும், இப்போது இருவரும் சந்தோசமாக இருப்பதற்கும் நான் தான் காரணம். அதாவது சூது கவ்வும் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்று யோசித்தோம். அப்படம் அருமையான படம். எனவே சூதுகவ்வும் படத்துக்கு முன்பு என்ன நடந்து என்பதை விளக்கும் வகையில் இருக்கும் இப்படம். அதனால் தான் இப்படத்தில் நடித்தேன்.

நானும் ரவுடிதான் படத்தில் நான் நடிக்க வேண்டியது. விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொன்ன போது, அந்தக் கதை எனக்கு செட்டாகாது என்று கூறினேன். அப்படத்தில் நான் நடித்திருந்தால் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்க மாட்டார். அவருக்கு பதில் வேறொரு ஹீரோயின் நடித்திருப்பார். அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும், நயன்தாரா – விக்னேச் சிவன் இடையிலான காதல் மலர்திருக்காது. நான் நடிக்காதால் தான் நயன் – விக்கி இடையே காதல் மலர்ந்து, திருமணமும் நடந்தது என்று தெரிவித்துள்ளார்.

மிர்சி சிவா அப்படத்தில் நடிக்காதது பற்றி ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தாலும், அவர் இப்போது கூறிய லாஜிக்கான விசயத்தை கேட்டு ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டு வருகின்றனர். அப்படம் மிஸ்ஸானால் என்ன அவருக்கு இன்னொரு படமாக கிடைக்காது என கருத்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News