ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

திருமணம் நடந்த பூரிப்பில் இருக்கும் விக்கி, நயன் ஜோடி.. ட்விட்டரை கலக்கும் திருமண புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தன் காதலர் விக்னேஷ் சிவனை இன்று கரம் பிடித்து உள்ளார். நீண்ட காலமாக காதல் செய்து வந்த இந்த ஜோடி இன்று காலை 10 மணி அளவில் பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருப்பதியில் நடக்க இருந்த இவர்களின் திருமணம் சில காரணங்களால் இன்று மகாபலிபுரம் அருகில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் சிறப்பாக நடந்துள்ளது. சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதனால் இன்று காலை முதலே நயன்தாராவின் திருமண புகைப்படத்தை காணும் ஆவலில் இருந்த ரசிகர்களுக்கு எந்த ஒரு புகைப்படமும் வெளியாகாமல் ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த அளவுக்கு நயன்தாரா திருமணம் குறித்து எந்த விஷயமும் வெளியில் கசியாதவாறு பல ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமண புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் கணிப்புப்படி சிவப்பு நிற உடை அணிந்து நயன்தாரா கொள்ளை அழகுடன் மிளிர்கிறார்.

ஆனால் நயன்தாரா புடவை அணியாமல் பூக்களால் செய்யப்பட்டது போன்ற ஒரு உடையிலும், விக்னேஷ் சிவன் குர்தா போன்ற உடையிலும் காட்சி அளிக்கின்றனர். அந்த போட்டோவில் நயன்தாராவின் முகத்தில் திருமணம் நடந்து விட்ட மகிழ்ச்சியும், பூரிப்பும் தெரிகிறது.

nayanthara
nayanthara

மேலும் சந்தோஷ பூரிப்பில் இருக்கும் நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலுடன் அணைத்து நெற்றியில் முத்தமிடுவது போன்று எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நயன்தாராவின் திருமண போட்டோ தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Trending News