Nayanthara: நயன்தாரா இப்போது சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, விக்கியுடன் ரொமான்ஸ், பிஸ்னஸ் என மேடம் ரொம்ப பிசி.
ஆனாலும் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சோசியல் மீடியாவில் பதிவிட அவர் தவறுவதில்லை. அப்படி அன்னையர் தினத்தன்று தன் மகனுடன் இருக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு இருந்தார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டாக இருந்த அந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதையடுத்து தற்போது அவர் தன் கணவருடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்றுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.
திருச்செந்தூரில் நயன்தாரா
அதன்படி நயன்தாரா விக்கியுடன் திருச்செந்தூர் முருகனை காண வந்திருந்தார். எப்போதுமே அந்த கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆன்மீக சுற்றுலா வந்த நயன்தாரா
அதில் நயன்தாரா வந்து இருப்பதை தெரிந்து ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு குவிந்து விட்டனர். அவர்களையெல்லாம் பார்த்து கையசைத்த லேடி சூப்பர் ஸ்டார் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
இதற்கு முன்னதாக இருவரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தானுமாலயன் ஸ்வாமி கோவில் என தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் வந்தவர்களுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் திடீரென நயன் ஆன்மீக சுற்றுலா வந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.