புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பில்லா படத்தில் நயன்தாராவுக்கு பதில் முதலில் ஒப்பந்தமான விஜய் பட நடிகை.. எல்லாருமே சூனாபானா ஆகிட முடியுமா!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான படத்தின் ரீமேக்கான பில்லா படம் தல அஜித் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்டது. மேலும் இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் தல அஜித் நடிப்பில் உருவான பில்லா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் வலிமை படத்தை எதிர்பார்த்து காய்ந்து போயிருந்த அஜித் ரசிகர்கள் பில்லா படத்தை பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

பில்லா படம் வெளியாவதைத் தொடர்ந்து பில்லா படத்தில் நடந்த பல சுவாரசியமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தல அஜித் நடிப்பில் உருவான பில்லா படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திற்காக முதலில் பேசப்பட்டவர் விஜய் பட நடிகையாம்.

nayanthara-billa-cinemapettai
nayanthara-billa-cinemapettai

அவர் வேறு யாரும் இல்லை. விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த இஷா கோபிகர் என்பவர் தான். தமிழில் என் சுவாசக் காற்றே, ஜோடி, நரசிம்மா போன்ற படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார். அதன் பிறகு இந்திக்கு சென்றவர் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

isha-koppikar
isha-koppikar

நயன்தாரா கதாபாத்திரத்திற்காக பில்லா படத்தை முதலில் பேசப்பட்டது இசா கோபிகர் தான். அதற்காக பெரிய சம்பளம் அவர் கேட்டதால் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததாம் படக்குழு. மேலும் அந்த காலகட்டத்தில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தன.

வெற்றி வெறியில் இருக்கும் நயன்தாராவுக்கு இந்த கதாபாத்திரத்தை சொன்னதும் உடனடியாக உடல் எடையை குறைத்து ஜிம் பாடியுடன் தெறிக்க விட்டார். இன்றும் பில்லா படத்தில் நயன்தாராவின் நீச்சல் உடை காட்சியை பார்த்து ஏங்காதே ரசிகர்கள் இந்த தமிழ்நாட்டில் உண்டோ. மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு நயன்தாராவை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

Trending News