நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக இரண்டு முன்னணி நடிகைகளிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
ஆர் ஜே பாலாஜி மற்றும் அவரது நண்பர் சரவணன் இயக்கத்தில் உருவாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். அம்மனாக நடித்திருந்த நயன்தாராவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் நயன்தாராவுக்கு பதிலாக முதன்முதலில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க இருந்தவர் முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தானாம். கதையை கேட்டதுமே ஓகே சொல்லிவிட்டாராம் ஸ்ருதி ஹாசன்.
ஆனால் நட்பின் காரணமாக எதிர்பாராமல் மூக்குத்தி அம்மன் படக் கதையை யதார்த்தமாக நயன்தாராவிடம் சொல்ல உடனே நான் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டாராம். நட்பின் காரணமாகவே அந்த படத்தில் நயன்தாரா நடித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த இருவருக்கும் முன்பே அம்மன் கதாபாத்திரம் என்றதும் ஆர் ஜே பாலாஜிக்கு நினைவுக்கு வந்தது நடிகை அனுஷ்கா தானாம். சரித்திர கதைகளில் பல வெற்றி படங்களை கொடுத்த அனுஷ்கா மூக்குத்தி அம்மன் படத்தில் முதல் சாய்ஸாக இருந்ததில் ஆச்சரியம் இல்லைதான்.

நயன்தாரா மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகிய இருவரையும் விட ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது நடிகை ஊர்வசியின் கதாபாத்திரம் தான். அவருடைய எதார்த்தமான காமெடி கலந்த நடிப்பு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்றால் மறுப்பதற்கில்லை.