வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்பு நயன்தாரா பற்றிய ரகசியத்தை உளறிய இயக்குனர்.. பட புரமோஷனுக்காக போட்டுக்கொடுத்த பரிதாபம்

தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசுக்கள் ஏகப்பட்டது பார்த்திருப்பீர்கள். அதிலும் சிம்பு நயன்தாரா காதல் கிசுகிசு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு இருவரும் காதலிக்கும் காலங்களில் எசகு பிசகாக நடந்து கொண்டனர்.

பொது இடங்களில் கட்டிப்பிடிப்பதைக் கூட மன்னித்து விடலாம். வாயோடு வாய் வைத்து வயலின் வாசித்ததை எப்படி ஏற்றுக்கொள்வது. அதுதான் அனைவருக்கும் கொஞ்சம் காண்டு ஏற்றி விட்டது போல.

அவர்களது வயித்தெரிச்சலில் அடுத்த சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தில் நடித்திருந்தாலும் இருவருக்குள்ளும் மீண்டும் காதல் துளிர் விடவில்லை.

சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் வல்லவன். இந்த படத்தில் எந்த அளவுக்கு நெருக்கமாக நடித்தார்கள் என்பதை ஓபன் ஆக சொல்ல முடியாது. ஆனால் அதற்கு முன்பே நயன்தாரா சிம்புவின் கைகளில் மாட்ட வேண்டியதாம்.

சிம்பு மற்றும் கோபிகா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தொட்டி ஜெயா படத்தில் முதன் முதலில் நயன்தாராவை நடிக்க வைக்க இருந்தார்களாம். பத்திரிக்கைகளில் வந்த அட்டை படத்தை பார்த்துவிட்டு நயன்தாராவை ஓகே செய்தாராம் அந்த படத்தின் இயக்குனர் துரை.

ஆனால் அது பின்னாளில் நடக்க முடியாமல் போய்விட்டது என தற்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு ரகசியம் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். ரகசியம் என்றால் வேறு மாதிரி எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த பேட்டி ஏமாற்றத்தையே கொடுத்தது. VZ துரை சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் இருட்டு என்ற வெற்றி படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

thotti-jaya-cinemapettai
thotti-jaya-cinemapettai

Trending News